கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே. சுதீஷ் தயாரிக்கும் Production No.10 திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று சென்னையில் சிறப்பாக தொடங்கியது.
இப்படத்தில் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்கிறார். ‘கட்டப்பாவ காணோம்’ படத்தை இயக்கிய மணிசியோன் இப்படத்தை இயக்குகிறார். பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்ய, மனு இரவிச்சந்திரன் இசையமைக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு தொடக்க நிகழ்வில், பிரேமலதா விஜயகாந்த் கேமராவை ஆன் செய்ய, பூர்ண ஜோதி சுதீஷ் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.
- Advertisement -
மேலும், டாக்டர் ஜானு ஸ்ரீ சுதீஷ், நடிகர்கள் இளவரசு, தம்பி ராமையா, படூர் ரமேஷ், மைனா நந்தினி, இந்திரஜா ரோபோ சங்கர், பட்டிமன்றம் ராஜா, பிரகதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘வாணவேடிக்கை’ திரைப்படத்தின் படப்பிடிப்பும், Production No.10 படத்தின் படப்பிடிப்பும் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இப்படத்தின் டைட்டில் லுக் இன்று மாலை 6 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயனால் வெளியிடப்பட உள்ளது.