காது வலி தான் மிச்சம்.. கங்குவா படத்தை கிழித்து தொங்கவிட்ட ப்ளூ சட்டை மாறன்..!

கங்குவா படம் குறித்து பேசி உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் ஒருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியானது.

Blue Sattai Maaran Tweet About Kanguva Movie

சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும் திஷா பதானி, கருணாஸ், யோகி பாபு, நட்டி நடராஜன், பாபி தியோல் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இது குறித்து ப்ளூ சட்டை மாறன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், எல்லா விமர்சனமும் கழுவி ஊத்துறது இவரை தான்.. இருக்கிற இசைக்கருவிகளை கத்த விட்டது போதாதுன்னு..அண்டா, குண்டா, தோசை கரண்டியில கூட மியூசிக் போட்டு காதை கிழிச்சி இருக்கலாம் இல்ல என்று தேவி ஸ்ரீ பிரசாத்தை கூறியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு கங்குவாய் என பெயர் வைத்ததை விட கத்துவா என்று பெயர் வைத்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.

 

Blue Sattai MaaranBlue Sattai Maaran Tweet About Kanguva MovieDisha Pathanikanguva movieKanguva Movie Reviewsuriyaகருணாஸ்திஷா பதானிநட்டி நடராஜன்பாபி தியோல்ப்ளூ சட்டை மாறன்யோகி பாபு