80ஸ் நாயகியாக மாறியுள்ளார் பிக் பாஸ் ஓவியா.
தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஓவியா. அதனைத் தொடர்ந்து மன்மதன் அம்பு,முத்துக்கு முத்தாக, கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு, மதயானைக்கூட்டம், யாமிருக்க பயமே, மெரினா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இத்தனை படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்களின் பேராதரவை பெற்று இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருந்தது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இட் இஸ் நாயகி போல கெட்டப் போட்டுக் கொண்டு விதவிதமாக போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.