பிக் பாஸ்: வைல்ட் கார்ட் என்ட்ரியாக இரண்டு குக் வித் கோமாளி பிரபலங்கள்..! வைரலாகும் சூப்பர் அப்டேட்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக பங்கேற்கப் போகும் இரண்டு போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

bigg boss tamil8 wild card entry update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

மூன்று வாரங்கள் முடிந்த நிலையில் ரவீந்தர்,அருண், மற்றும் தர்ஷா என மூன்று போட்டியாளர்கள் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்த வாரம் நாமினேஷனில் ஒன்பது போட்டியாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு நடுவில் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் யார் யார் வருவார்கள் என்று எதிர்பார்ப்பு மக்கள் மனதில் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.அது குறித்து வெளியான தகவலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான இரண்டு குக்குகள் கலந்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அது வேறு யாருமில்லை பவித்ரா மற்றும் சந்தோஷ் இருவரும் கலந்து கொள்ளப் போவதாக சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

bigg boss tamil8 wild card entry update
bigg boss tamil8bigg boss tamil8 wild card entry updatewild card entry updateகுக் வித் கோமாளிவிஜய் டிவிவைல்ட் கார்ட்