மகளின் பெயரை அறிவித்துள்ளார் பாக்கியலட்சுமி ரித்திகா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் அமிர்தா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரித்திகா தமிழ்ச்செல்வி. இவர் திருமணத்திற்கு பிறகும் சீரியலில் தொடர்ந்து நடித்திருந்த நிலையில் திடீரென்று சீரியலில் இருந்து விலகினார்.
பிறகு கர்ப்பமாக இருப்பதை அறிவித்த ரித்திகா அதன் பிறகு எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.
சமீபத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்திருந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் குழந்தை மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
தற்போது அந்த குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடந்துள்ளது. அதில் குழந்தைக்கு நிலா என பெயர் வைத்துள்ளதாக அறிவித்துள்ளார். இவர் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் போது இவரின் மகளாக நடித்த குழந்தையின் பெயரும் நிலா என்பது குறிப்பிடத்தக்கது.