அக்கா மகளின் புகைப்படத்தை வெளியிட்டு பாக்கியலட்சுமி சீரியல் கோபி பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.
baakiyalakshimi serial gopi latest post update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் கோபி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ். தற்போது பரபரப்பான கதை களத்துடன் சீரியல் நகர்ந்து வருகிறது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அக்கா மகளுடன் இருக்கும் புகைப்படத்துடன் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.
அதில் நண்பர்களே இந்தக் குட்டி தேவதை என்னோட அக்கா பொண்ணு இந்த திறமையான குழந்தையை நீங்க ரஜினி முருகன், ராட்சசன், மற்றும் என்னை அறிந்தால் போன்ற படங்களில் பார்த்திருப்பீர்கள் இவரின் பெயர் திரிஷாலா உங்கள எல்லாருடைய வாழ்த்துக்கள் இந்த திறமையான ஏஞ்சலுக்காக வேண்டுகிறேன் முடிந்தால் அவரின் இன்ஸ்டாகிரையும் ஃபாலோ பண்ணுங்க நன்றி என்று தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.