Browsing author

Suresh

நயன்தாரா நடிப்பில் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ பட டீசர், வைரல்..

நயன்தாரா, நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ படத்தின் டீச வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. ஜார்ஜ் பிலிப்ராய் மற்றும் சந்தீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தை வினீத் ஜெய்ன் மற்றும் நிவின் பாலி இணைந்து தயாரித்துள்ளனர். படத்தில் நயன்தாரா, நிவின் பாலியுடன், புதுமுகங்கள் பலர் நடித்துள்ளனர். படத்தின் டீசரில், ‘உணவகத்தில் இருக்கும் நிவின் பாலியை விசாரிக்க, நயன்தாரா மஃப்டியில் வர.. அதிலிருந்து படத்தின் காட்சிகள் தொடங்கி மீண்டும் அங்கேயே வந்து முடிவது சிரிப்பலையை உருவாக்குகிறது. டீசரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் […]

சம்பளம் வேண்டாம், ரஜினி சாருடன் நடித்ததே போதும்: அமீர்கான் பெருமிதம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ படம், முதல் நாளிலேயே 150 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. ரஜினியின் 171-வது படமான இதில், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் சாகிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா என பலர் நடித்துள்ளனர். பாலிவுட் ஸ்டார் அமீர்கான் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்துக்காக, மெகா ஸ்டாரான அமீர்கான் ரூ.20 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக வலைதளத்தில் செய்தி பரவியது. ஆனால், இதை அமீர்கான் மறுத்துள்ளார். ‘கூலி படத்துக்காக நான் […]

முட்டாள்தனமாக பேசியதற்கு, இப்போது வருந்துகிறேன்: நடிகை மிருணாள் தாக்கூர் பக்குவம்..

நடிகை மிருணாள் தாக்கூர், இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர், தனுஷை காதலிப்பதாகச் சமீபத்தில் செய்தி வெளியாகி இருந்தது. அதை அவர் மறுத்திருந்தார். இந்நிலையில் புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார், மிருணாள். சில வருடங்களுக்கு முன் நடிகை பிபாஷா பாசு பற்றி அவர் பேசிய வீடியோ, இப்போது வைரலானது. அதில், ‘நான் பிபாஷா பாசுவை விட, நன்றாக இருக்கிறேன். ஆண்களைப் போல தசைகளைக் கொண்டவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமா? பிபாஷா பாசு இருக்கிறார்’ என […]

மதராஸி மற்றும் காந்தி கண்ணாடி படங்கள், ஒரே நாளில் ரிலீஸ்..

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்திலும் நடித்து வருகிறார். இதில், மதராஸி படம் வரும் செப்டம்பர் 5-ந்தேதி திரைக்கு வரும் நிலையில், படம் குறித்த அப்டேட் வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், கேபிஒய். பாலாவின் ‘காந்தி கண்ணாடி’ படமும் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான […]

முதன்முறையாக, நடிகை ஸ்வேதா மேனன் வரலாற்றுச் சாதனை..

மலையாளத்தில் பிரபலமான நடிகையாக திகழும் ஸ்வேதா மேனன், தமிழ் சினிமால் அரவாண், நான் அவனில்லை 2, சிநிகிதியே, துணை முதல்வர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்திருக்கிறார். இதனிடையில் நடிகை ஸ்வேதா மேனனுக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது. ஆபாச படங்களில் நடித்ததாகவும், விளம்பரங்களில் நிர்வாண போஸ் கொடுத்ததாகவும் புகார்கள் எழுந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பாக அவர் நடித்த ரதி நிர்வேதம், பாலேரி மாணிக்கம் உள்ளிட்ட படங்களிலும், காமசூத்ரா விளம்பரத்திலும் ஆபாச காட்சிகளில் நடித்ததாக ஸ்வேதா மேனனுக்கு எதிராக […]

நடிகை ஜான்விகபூர் நடித்த படத்திற்கு, கிறிஸ்தவ அமைப்பு கடும் எதிர்ப்பு..

ஜான்வி கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகியுள்ள ‘பரம்சுந்தரி’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. தேவாலயம் ஒன்றில் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையிலான காதல் காட்சியுடன் அந்த ட்ரெய்லர் தொடங்கியது. இந்த காட்சிக்கு கிறிஸ்தவ அமைப்பு ஒன்று கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வாட்ச்டாக் அறக்கட்டளை என்ற பெயர் கொண்ட அந்த அமைப்பு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம், மத்திய தணிக்கை வாரியம், மும்பை காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில், ‘கிறிஸ்தவ மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் அந்த காட்சியை படத்திலிருந்து […]

நடிகை மிருணாள் கேலிக்கு, நடிகை பிபாஷா பாசு பதிலடி..

நடிகைகளுக்குள் சில நேரங்களில், காழ்ப்புணர்ச்சி வெளிப்பட்டு விவகாரமாகி விடும். அதுபோல இதோ ஓர் நிகழ்வு.. இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் மிருணாள் தாகூர், தற்போது தனுஷ் உடன் காதல் என்றெல்லாம் பேசப்பட்டு இன்னும் பிரபலமாகி விட்டார். தற்போது அவர் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கி இருக்கிறார். ‘பாலிவுட் நடிகையான பிபாஷா பாசு, ஆண்களைப் போல தசைகளைக் கொண்டிருக்கிறார். அவரைவிட நான் சிறந்தவள்’, என உருவக்கேலி செய்யும் வகையில் பேசியிருந்தார். முன்பு பேசிய அந்த […]

அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்: ரஜினி அறிக்கை..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகிற்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் பிரமுகர்கள், திரையுலக நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தார்கள். இதற்கு அனைவருக்கும் ரஜினி நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ரஜினிகாந்த், ‘அனைவருக்கும் 79-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள். எனது 50 ஆண்டு கால திரையுலகப் பயணத்தை ஒட்டி என்னை மனமார வாழ்த்திய என் நண்பரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் […]

ஒரேநாளில் வெளியான கூலி, வார்-2 படங்கள்: கலெக்‌ஷன் விவரம்..

ஜூனியர் என்.டி.ஆர் – ஹ்ரித்திக் ரோஷன் இணைந்து நடித்த ஆக்‌ஷன் திரில்லர் படமான ‘வார் 2’ ஆகஸ்ட் 14-ந்தேதி பான் இந்தியா அளவில் வெளியானது. இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார், ஹ்ரித்திக் ரோஷன் போன்ற ஒரு முன்னணி நட்சத்திரத்துடன் திரையில் இடம் பெறுகிறார் என்பது டோலிவுட் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம், உலகம் முழுவதும் 85 கோடி முதல் 90 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் […]

‘தலைவன் தலைவி’ படம் ஓடிடி.யில் வெளியீடு..

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘தலைவன் தலைவி’ படம், வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழகத்தில் மொத்த வசூலில் ரூ.50 கோடியை கடந்து சாதனை புரிந்தது. தற்போது இப்படம் ஆகஸ்ட் 22-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ‘தலைவன் தலைவி’ திரைப்படம் வெளியாகும் முன்பே ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமம் அனைத்துமே விற்கப்பட்டது. முழுமையாக குடும்பத்தை மையப்படுத்திய படம் என்பதால், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. […]