நடிகைகளுக்குள் சில நேரங்களில், காழ்ப்புணர்ச்சி வெளிப்பட்டு விவகாரமாகி விடும். அதுபோல இதோ ஓர் நிகழ்வு..
இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் மிருணாள் தாகூர், தற்போது தனுஷ் உடன் காதல் என்றெல்லாம் பேசப்பட்டு இன்னும் பிரபலமாகி விட்டார். தற்போது அவர் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கி இருக்கிறார்.
‘பாலிவுட் நடிகையான பிபாஷா பாசு, ஆண்களைப் போல தசைகளைக் கொண்டிருக்கிறார். அவரைவிட நான் சிறந்தவள்’, என உருவக்கேலி செய்யும் வகையில் பேசியிருந்தார்.
முன்பு பேசிய அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு பிபாஷா பாசுவின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையில் மிருணாள் தாகூருக்கு, பிபாஷா பாசு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்ட பிபாஷா பாசு,
‘வலிமையான பெண்கள் எல்லோரையும் தூக்கி விடுவார்கள். அழகான பெண்களே, உங்கள் தசைகளை உறுதியாக்கி கொள்ளுங்கள். அதுவும் பெண்மைக்கு அழகுதான். பெண்கள் உடல்ரீதியாக வலிமையாக இருக்கக் கூடாது என்ற முட்டாள்தனமான சிந்தனையை மாற்றிவிடுங்கள்’ என்று மிருணாளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.