Browsing author

Suresh

நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த ‘இரண்டாம் சௌத்ரி’ டாக்டர். பசலியான் நசரேத்: இயக்குநர் பி.சி. அன்பழகன் நம்பிக்கை

இந்திய பாரம்பரிய கலை இலக்கிய பேரவை சார்பில் சிவனி சதீஷ் நடத்திய சுதந்திர தின விழாவில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் டாக்டர். பசலியான் நசரேத் அவர்களுக்கு விருது வழங்கி, இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேசியதாவது: ‘தமிழ்த் திரையுலகில் லவ்வர்ஸ், குட் நைட், டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய வெற்றிப் திரைப்படங்களின் தயாரிப்பாளர் டாக்டர் பசலியான் நசரேத் நாஞ்சில் நாடு குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்த மாவட்டத்திற்கென தனி பெருமைகள் உண்டு. இலக்கியத்திற்கு வள்ளுவர், தொல்காப்பியர். சினிமாவுக்கு […]

அஜித்தின் ‘ஏகே64’ படம் பற்றி இயக்குநர் ஆதிக் அப்டேட்ஸ்..

‘தல’ அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்கியிருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்தப் படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்த்தில் உருவாக்கப்பட்டது. அதேபோல், படம் வரவேற்பைப் பெற்றதையடுத்து, அஜித் நடிக்கும் 64-வது படத்தையும் ஆதிக் இயக்கவிருக்கிறார். இந்த தகவலை அவர், உறுதிப்படுத்தி இருக்கிறார். ஏகே64-வது படத்தில், மிஷ்கின் வில்லனாகவும் ஸ்ரீலீலா நாயகியாகவும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், ஆதிக், அஜித்தின் 64-வது படம் குறித்து தெரிவிக்கையில் ‘குட் […]

‘இட்லி கடை’ படத்தில் அருண் விஜய்யுடன் தனுஷ் பாக்ஸிங்.?

தமிழ் திரையுலகின் பன்முகத் திறமையாளர் தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டு, படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அருண் விஜய் இப்படத்தில் நடிக்கின்றார் என்பதை அறிவிக்க, படக்குழு ஒரு போஸ்ட்டரை வெளியிட்டது. அந்த போஸ்டரின் மூலம், அருண் விஜய் பாக்ஸராக நடிக்கின்றார் என தெரிகின்றது. தற்போது இப்படத்திலிருந்து மேலும் ஒரு புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இதிலும் அருண் விஜய் பாக்ஸராக இருப்பதைப் போல காண்பிக்கப்படுகிறது. அருகே, தனுஷும் பாக்சிங் க்ளவுஸை போட்டுகொண்டு இருக்கின்றார். […]

ஜீத்து மாதவன் இயக்கத்தில், சூர்யாவின் 47-வது திரைப்படம்..

சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46-வது படத்திலும் நடித்து வருகின்றார் சூர்யா. இவ்விரு படங்களை தொடர்ந்து சூர்யா நடிக்கவிருக்கும் படத்தை பற்றிக் காண்போம்.. சூர்யா, அடுத்ததாக ஜீத்து மாதவன் இயக்கத்தில் தனது 47-வது படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் மோகன்லால் முக்கியமான ஒரு ரோலில் சூர்யாவுடன் இணைந்து நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வந்தன. இதனைத்தொடர்ந்து இப்படத்தில் ‘ஆவேஷம்’ படத்தில் நடித்த சஜின் கோப்புவும் […]

எதிர்மறை விமர்சனங்களால் ‘கூலி’ பட வசூலில் பாதிப்பா.?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்துக்கு எதிர்மறை விமர்சனங்களும் குவிந்து வருகின்றன. இதனைத் தாண்டி அனைத்து மாநிலங்களிலும் இப்படம் வசூல் செய்து வருகிறது. இதனால், படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதனிடையே, எதிர்மறை விமர்சனங்கள் தொடர்பாக, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறும்போது, ‘எதிர்மறை விமர்சனம் சொன்னால் நமக்கு விளம்பரம் கிடைக்கும் என்று பல பேர் சமூக வலைதளத்தில் இருக்கிறார்கள். […]

விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்தின் 2-ம் பாகம்: ஏ.ஆர்.முருகதாஸ் அப்டேட்ஸ்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘மதராஸி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், முன்னதாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், ஜெயராம், வித்யூத் ஜாம்வால் உள்பட பலர் நடிப்பில் வெளியான படம் ‘துப்பாக்கி’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று, இதர மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது, அதன் 2-ம் பாகம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவிக்கையில், ‘தனது படங்களில் எதனை 2-ம் பாகம் செய்ய முடியும் என்ற கேள்விக்கு பதிலளித்த ஏ.ஆர்.முருகதாஸ், ‘துப்பாக்கி’ பண்ணலாம். ஏனென்றால் கதையாகவே […]

ஏன் இந்த எண்ணம்?: சினிமாக்காரர்கள் மீது, இயக்குநர் பேரரசு ஆதங்கம்..

கெளசி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கடுக்கா’. இயக்குநர் முருகராசு இயக்கியுள்ள இப்படம் கிராமிய பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த விழாவில் இயக்குநர் பேரரசு பேசும்போது, கடுக்கா என்றால் காய் இல்லை, நம்பவைத்து ஏமாற்றுவதுதான் கடுக்கா. படத்தில் இரண்டு ஹீரோ, அதில் யாருக்கு ஹீரோயின் […]

தோல்விக்கு நான் மட்டுமே காரணமல்ல: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், முன்னதாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான், சத்யராஜ், ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சிக்கந்தர்’. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இப்படம் தோல்வியை தழுவியது. பெரிய நடிகர்களின் இந்திப் படங்களில் பெரும் தோல்வியை தழுவிய படம் ‘சிக்கந்தர்’ என்பது குறிப்பிடத்தக்கது. அப்படத்தின் தோல்வி குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவிக்கையில், ‘சிக்கந்தர்’ படத்தின் கதை என் மனதுக்கு நெருக்கமான ஒன்று. ஒரு ராஜா […]

‘இட்லி கடை’ தனுஷ் குறித்து, பார்த்திபன் பதிவு செம வைரல்..

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், தனக்கே உரிய தனித்த பாணியில் ஒரு பதிவை போட்டுள்ளார். அந்த பதிவு வழக்கம்போல வைரலாகி வருகின்றது. தனுஷின் இட்லி கடை திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருப்பதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார். ‘தேசிய விருது பெற்ற ‘ஆடுகளம்’ திரைப்படத்தில் நடித்திருந்தால், மேலும் ஒரு தேசிய விருதை நான் வாங்கியிருப்பேன். ஆனால், அது மிஸ்ஸானது. அதுபோல, தனுஷுடன் நான் இணைந்து நடித்த ‘சூதாடி’ படமும் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தற்போது ‘இட்லி கடை’ படத்தில் அவரே என்னை […]

அஜித்தின் ‘AK64’ திரைப்படம் பற்றி, இயக்குநர் ஆதிக் அப்டேட்ஸ்..

‘தல’ அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ வெற்றிக்கு பிறகு, ஆதிக் ரவிச்சந்திரனையே தன் அடுத்த பட இயக்குனராக தேர்ந்தெடுத்துள்ளார் அஜித். இதனை ஆதிக் அதிகாரபூர்வமாக தெரிவித்தார். இப்படத்தை விநியோகஸ்தரான ராகுல் தயாரிப்பார் என கூறப்படுகின்றது. இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் ஏகே64 படம் குறித்து தெரிவிக்கையில், ‘குட் பேட் அக்லி’ படம், அஜித் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படம். ஆனால், ஏகே64 திரைப்படம் வித்தியாசமாக அனைவருக்குமான படமாக இருக்கும். ரசிகர்கள் ரசிக்கும்படியான ஒரு என்டர்டைனிங் படமாக ஏகே64 இருக்கும்’ என்றார். […]