Browsing author

Suresh

‘டீசல்’ படத்தின் கதை உருவானது எப்படி தெரியுமா?

‘டீசல்’ படத்தின் கதைக்களம் பற்றிக் காண்போம்.. சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா, வினய் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டீசல்’ படம் நாளை 17-ந்தேதி வெளியாகிறது. இப்படம் பற்று சண்முகம் முத்துசாமி தெரிவிக்கையில், ‘டீசல்’ படம் ஆரம்பித்ததில் இருந்து வெளியீடுவரை எந்த சோர்வும் இல்லாமல் உழைத்த அனைவருக்கும் நன்றி. காதல் படங்கள், ஃபேமிலி சப்ஜெக்ட் எல்லாம் நிறைய பார்த்தாச்சு. ஏதாவது புதிதாக கதை எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் பெட்ரோல் பங்க்கில் […]

‘பைசன்’ படத்தை பார்த்துவிட்டு, இயக்குநர் ராம் தெரிவித்த முதல் விமர்சனம்

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்து வரும் மாரி செல்வராஜின் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த ‘பைசன்’ படம் வருகிற 17-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்பட பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது என […]

‘டியூட்’ படக்தையை தேர்வு செய்தது எப்படி?: பிரதீப் சுவாரஸ்ய தகவல்

பிரதீப் ரங்​க​நாதன், மமிதா பைஜு நடித்​துள்ள படம், ‘டியூட்’ படம் வருகிற 17-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தில் சரத்​கு​மார், ரோகிணி, ‘பரி​தாபங்​கள்’ டேவிட் உள்பட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரித்​துள்ள இந்​தப் படத்தை அறி​முக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்​ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாய் அபயங்​கர் இசை அமைத்​துள்​ளார். இந்​தப் படத்​தின் இசை வெளி​யீட்டு விழா சென்னை​யில் நடைபெற்​றது. விழா​வில், பிரதீப் பேசும்​போது, ‘சரத்​கு​மார் சார் இந்​தப் படத்தை ஒப்​புக் கொண்​டதற்கு நன்​றி. நான் […]

என்ன தகுதி வேண்டும்?: ஹரீஸ் கல்யாண் ஆதங்கம்..

ஹரீஸ் கல்யாண் நடித்து வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் வரவேற்பு பெற்றது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து அவர் களம் இறங்கியுள்ள நிகழ்வு பற்றிக் காண்போம்.. சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் ‘டீசல்’ படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி திரைக்கு வருகிறது. இதற்கிடையில் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியாகும் பேச்சுக்கு ஹரிஷ் கல்யாண் ஆதங்கம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘என் சினிமா பயணத்தில் நான் நடித்த படம் தீபாவளிக்கு களமிறங்குவது […]

மோதல் காரணமாக ‘மகுடம்’ படத்தின் இயக்குநர் ஆனார் விஷால்..

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஷால் நடிக்கும் ’மகுடம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பிலேயே விஷால் – இயக்குநர் ரவி அரசு இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால், சில காட்சிகளை விஷாலே இயக்கி வந்தார். இதனைத் தொடர்ந்து படத்தில் உள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் பேசி இருவருக்கும் இடையே பிரச்சினையை சரி செய்தார்கள். அதற்குப் பின்பும் விஷால் – ரவி அரசு இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறது. இதனால் […]

பைசன், டியூட், டீசல்: பந்தயத்தில் முந்தப் போவது எந்தப் படம்?

இந்த ஆண்டின் தீபாவளி பந்தயத்தில் 3 முக்கிய படங்கள் வருகிற 17-ந்தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகின்றன. அவை பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டியூட்’, மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’, ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘டீசல்’ ஆகும். இப்படங்கள் பற்றிய தகவல்கள் பார்ப்போம். டியூட்: இயக்குநராக ‘கோமாளி’ படம் மூலம் சூப்பர்ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் அதன்பிறகு ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களின் மூலம் இளசுகளின் ஆதர்ச நடிகர்களில் ஒருவராகி விட்டார். முந்தைய இரண்டு […]

ரசிகர்களின் பாராட்டு பற்றி, ருக்மணி வசந்த் கருத்து..

‘பாராட்டுகள் தற்காலிகமானவை’ என கூறியுள்ளார். ருக்மணி. இது பற்றிக் காண்போம்.. கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர்-1’ படம் பான் இந்தியா முறையில் 5 மொழிகளில் வெளியானது. இதில் இளவரசியாக நடித்த அவருடைய நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து அவரை புதிய ‘நேஷனல் கிரஷ்’ என வலைதளங்களில் கூறி வருகின்றனர். இதுபற்றி அவர் கூறும்போது, ‘பலர் என்னை அப்படி அழைக்கிறார்கள். அது நன்றாக இருக்கிறது. ஆனால், அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. பாராட்டுகள் தற்காலிகமானவை. அவை […]

2 வருடம் கடும் உழைப்பு: ‘பைசன்’ துருவ் விக்ரம் அப்டேட்ஸ்..

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்​ரம் ஹீரோவாக நடித்​துள்ள ‘பைசன்: காள​மாடன்’ பட ட்ரெய்லர் வெளியாகி தற்போது கவனம் ஈர்த்து வருகிறது. தென்மாவட்ட வட்டார மொழியில் கபடி விளையாட்டை கதைக்களமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்​படத்​தில் அனுபமா பரமேஸ்​வரன், ரஜிஷா விஜயன், லால், பசுபதி உள்பட பலர் நடித்துள்ளனர். அப்ளாஸ் என்டர்டெயின்​மென்ட் தயாரித்​துள்ளது. இப்படம் வருகிற 17-ந்தேதி வெளி​யாகிறது. ‘பைசன்’ படம் பற்றி துருவ் விக்​ரம் தெரிவிக்கையில், ‘இது ஸ்போர்ட்ஸ் டிராமா கதை. திருநெல்​வேலி அருகே கதை […]

2 கெட்அப்களில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ பட ப்ரோமோ வீடியோ வெளியீடு எப்போது?

வெற்றிமாறன் தனது ‘வடசென்னை’ படத்திலேயே சிம்புவை இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், சில காரணங்களால் அப்போது இணைய முடியவில்லை. இதனையடுத்து தற்போது முதன்முறையாக சிம்புவுடன் கூட்டணி அமைந்துள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியாகி வரவேற்பு பெற்ற வடசென்னை உலகில் நடப்பதைப் போன்று ‘அரசன்’ படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார் வெற்றிமாறன். இந்த படத்துக்காக தனது நீண்ட தலைமுடியை எல்லாம் வெட்டி தற்போது புதிய லுக்கிற்கு மாறியுள்ளார் சிம்பு. அவர் இப்படத்தில் யங்காகவும், நடுத்தர வயது கொண்டவராகவும் என இரண்டு விதமான ரோலில் […]

மலைக்கா அரோராவுடன், சரக்கு அடித்து விட்டு ராஷ்மிகா மந்தனா குத்தாட்டம்: வைரல் நிகழ்வு..

‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா ஆடிய ‘காவாலா’ பாடல் ரசிகர்களை ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து ‘கூலி’ படத்தில் சவுபின் சாகீருடன் இணைந்து பூஜா ஹெக்டே ஆடிய ‘மோனிகா’ பாடலும் கவனத்தை ஈர்த்தது. முன்னதாக, தனுஷ்-சாய்பல்லவி இணைந்து போட்ட ஆட்டம் ‘ரௌடி பேபி’ பாட்டு வைரலாது நினைவுகூரத்தக்கது.்அவ்வகையில் இதோ பாலிவுட்டில் செம ஸாங். தனது கவர்ச்சி நடனத்திற்கு பெயர் பெற்ற மலைக்கா அரோரா, தற்போது ஒரு புதிய பாடலில் தோன்றியுள்ளார். தீபாவளிக்கு வெளியாகவுள்ள இந்தி படமான ‘தம்மா’ வில் இருந்து […]