Browsing author

Suresh

ரஜினிகாந்துடன் கமல்ஹாசன் சந்திப்பு: ஏன் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது கூலி, ஜெயிலர் 2 என இரண்டு படங்கள் தயாராகி வருகின்றன. இதில் லோகேஷ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் வருகிற ஆகஸ்ட் 14-ந்தேதி திரைக்கு வரவுள்ளது. நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அதேபோல் கமல்ஹாசனும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-3, கல்கி-2, விக்ரம்-2, படத்திலும் நடிக்க உள்ளார்.மேலும், ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவு இயக்கும் படத்தை தயாரித்து ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினராக வரும் 25-ந்தேதி கமல்ஹாசன் பதவியேற்க உள்ளதாக […]

என் படங்களில் தவறுகளை செய்திருக்கிறேன்: லோகேஷ் கனகராஜ் பேச்சு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘கூலி’ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ். இப்படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில், துருவ் சர்ஜா நடித்துள்ள ‘கேடி த டெவில்’ படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்திருந்தார் இந்தி நடிகர் சஞ்சய் தத். அப்போது பேசிய அவர், ‘லியோ படத்தில் சிறிய கதாபாத்திரத்தை கொடுத்துவிட்டார், இதனால், லோகேஷ் கனகராஜ் மீது கோபமாக இருக்கிறேன்’ என கிண்டலாகக் குறிப்பிட்டார். ஆனால், அவர் சீரியஸாக சொன்னதாகச் செய்திகள் வெளியானது. இது குறித்து லோகேஷ் […]

‘தலைவன் தலைவி’ படத்தின் கதை உருவான விதம்: இயக்குநர் பாண்டிராஜ் சுவாரஸ்ய தகவல்..

விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவன் தலைவி’ படம் ஜூலை 25-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில், இப்படம் பற்றி இயக்குநர் பாண்டிராஜ் கூறியதாவது: ‘இந்தப் படத்தின் தலைப்பு தோன்றிய தருணமும் இந்தப் படத்துக்கான கதை தோன்றிய சம்பவங்களும் அழகானது. ஓர் உண்மை சம்பவத்திலிருந்து இந்த கதையை எழுதி இருக்கிறேன். என் மகனுடைய பிறந்தநாள் விழாவுக்காகக் குலதெய்வ கோயிலுக்குச் சென்றபோது, நான் சந்தித்த இரண்டு கதாபாத்திரங்கள் ஆகாச வீரன் – பேரரசி. நேரில் பார்த்ததைப் படமாக […]

ரூ.9 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: கோர்ட்டில் ரவிமோகன் வழக்கு..

கோவையைச் சேர்ந்த பாபி டச் கோல்ட் யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனம், இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்த நிலையில், ஒப்பந்தப்படி படப்பிடிப்பை துவங்காததால் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி நடிகர் ரவி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஒப்பந்தப்படி, 2025 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 80 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கிய போதும், இதுவரை படப்பிடிப்பை துவங்காததால் தன்னால் வேறு படங்களில் நடிக்க முடியாமல் போனதாகக் […]

விருதை பெறும்போது, எனது விரல் நகங்களில் மாட்டுச் சாணம் இருந்தது: நித்யாமேனன் ஓபன் டாக்..

நித்யா மேனன் தற்போது தலைவன் தலைவி, இட்லி கடை ஆகிய இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். இரண்டு படங்களும் விரைவில் வெளியாக உள்ளன. இந்நிலையில், தனுஷுடன் ‘இட்லி கடை’ படத்தில் நடித்த அனுபவத்தை நித்யா மேனன் பகிர்ந்துள்ள தகவல் வைரலாகி வருகிறது. முன்னதாக, அவரது திரைப் பயணத்தில் ஓ காதல் கண்மணி, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் முக்கியமானவையாக அமைந்தன. குறிப்பாக, திருச்சிற்றம்பலத்தில் ஷோபனா கதாபாத்திரத்தில் பாரதிராஜாவுடன் இணைந்து அவர் செய்யும் சேட்டைகளும், தனுஷ் மீது இருக்கும் காதலை வெளிக்காட்ட […]

சிம்ரன் மீது, தற்போது ரீ என்ரி கொடுத்துள்ள மந்த்ரா பாய்ச்சல்..

நடிகை மந்த்ரா அருண் விஜய்க்கு ஜோடியாக ‘பிரியம்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிப்படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார். அஜித்துடன் ரெட்டை ஜடை வயசு, விஜய்யுடன் லவ் டுடே மற்றும் சிம்மாசனம் என பல படத்தில் நடித்து வந்தார். தமிழை விட தெலுங்கில் ராசி என்ற பெயரில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பின்னர், 2005-ம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீமுனியை திருமணம் செய்து கொண்டார். குழந்தை பிறந்த பின் சின்னத்திரையில் ரீ என்ட்ரி […]

ஒன்று மட்டும் உறுதி: ‘கூலி’ படம் குறித்து லோகேஷ் அப்டேட்ஸ்-ரசிகர்கள் உற்சாகம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் அடுத்த மாதம்14-ம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக, இப்படத்தின் 2 பாடல்கள் மட்டுமே வெளியிடப்பட்டு வரவேற்பு பெற்றுள்ளது. இச்சூழலில் டீசர், ட்ரெய்லர் உள்ளிட்டவை எப்போது என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் தெரிவிக்கையில், ‘கூலி’ படத்துக்கு எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகமாக இருக்கிறது. எனக்கே தெரியாத விஷயங்களை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் தினமும் எழுந்தவுடன் சமூக வலைதளங்களையும் பார்க்கிறேன். படத்தைப் பற்றி ஏதேனும் செய்திகள் இருக்கும். […]

பலர் என்னைப் பைத்தியம் என்கின்றனர்: ‘ராமாயணம்’ படத் தயாரிப்பாளர் பேச்சு..

நிதேஷ் திவாரி இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படம் அதிக எதிர்பார்ப்புக்குரிய படமாக இருந்து வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் ப்ரோமோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடிக்கின்றனர். இப்படத்தை நமித் மல்ஹோத்ரா தயாரிக்கிறார். படத்தின் இரு பாகங்களுக்கும் ரூ.1600 கோடி பட்ஜெட் என முன்பு தகவல் வெளியான நிலையில், தற்போது நமித் மல்ஹோத்ரா புதிய தகவலை வெளியிட்டுள்ளார். ‘ராமாயணம்’ படத்தின் இரு பாகங்களுக்கும் […]

‘கூலி’ படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து இயக்கும் படங்கள்..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ‘கூலி’ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இப்படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் அடுத்தடுத்து தான் இயக்கவிருக்கும் படங்கள் குறித்து லோகேஷ் தெரிவிக்கையில், ‘அடுத்து கார்த்தி நடிப்பில் ‘கைதி 2’ இயக்கவுள்ளேன். கமல் சாருடன் ‘விக்ரம் 2’, சூர்யாவுடன் ‘ரோலக்ஸ்’ ஆகிய படங்கள் உள்ளன. இப்படங்கள் அனைத்தும் முன்பே முடிவானவை. மாஸ்டர் 2, லியோ 2 ஆகியவை இயக்க ஆசை தான். ஆனால், விஜய் இல்லை. அவர் மீண்டும் […]

சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது படத்தில் விஷால்; 100-வது படம் பற்றி எதிர்பார்ப்பு..

சுந்தர்.சி இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ‘மதகஜராஜா’ பட வெற்றிக்குப் பிறகு, பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார் விஷால். இறுதியாக ரவி அரசு கதையில் நடிக்க இருப்பதை உறுதிப்படுத்தினார். இப்படத்தின் தயாரிப்புக்காக பல்வேறு தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது. இதனைத் தொடர்ந்து, இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு உள்ளது. இது விஷால் நடிப்பில் உருவாகும் 35-வது படமாகும். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் […]