Browsing author

Suresh

ஆகாசசூரன்-பேரரசி கதாபாத்திரங்களில் வெளியான ‘தலைவன்-தலைவி’ டிரெய்லருக்கு வரவேற்பு..

பாண்டிராஜ் இயக்கத்தில் ‘ஆகாச சூரன்’ விஜய் சேதுபதி – ‘பேரரசி’ நித்யா மேனன் நடிப்பில் ‘தலைவன் தலைவி’ உருவாகியுள்ளது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஜூலை 25-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தை ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டு வரவேற்பு பெற்று வருகிறது. விஜய் சேதுபதி – நித்யா மேனன் இருவருக்குமான திருமணம், ஊடல், காதல் ஆகியவைதான் படத்தின் கதைக்களம். என்பதை ட்ரெய்லர் காட்டுகிறது. நீண்டநாட்களுக்குப் பிறகு சுவாரஸ்யத்தை தூண்டும் வகையில் ‘கட்’ செய்யப்பட்ட ஒரு ட்ரெய்லர். கலகலப்பு, […]

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் ஷுட், மீண்டும் தொடங்கியது..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘மதராஸி’ படத்தை தொடந்து சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘பராசக்தி’. இதன் படப்பிடிப்புக்கு இடையே தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனையில் ஏற்பட்ட சிக்கலால் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. இதனை முன்வைத்து பல்வேறு தகவல்களும் வெளிவரத் தொடங்கின. தற்போது டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. இதனைத் தொடர்ந்து, அனைத்து நடிகர்களிடமும் தேதிகள் வாங்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டு உள்ளது. பொள்ளாச்சியில் இன்று […]

அதர்வா நடித்த க்ரைம் திரில்லர் ‘டிஎன்ஏ’ படம்: ஓடிடி.யில் வெளியீடு..

குழந்தையை தொலைத்த ஒரு தம்பதியின் வலி நிறைந்த தேடல் ‘டின்ஏ’ கதைக்களம். நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா நடிப்பில் ஜூன் 20-ந்தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இப்படம் வெளியீட்டுக்கு முன்பே, ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமை விற்கப்பட்டுவிட்டது. தற்போது ஜூலை 19-ம் தேதி ‘டி.என்.ஏ’ திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் நிமிஷா சஜயன், ரமேஷ் […]

இன்றுடன் ‘பாட்ஷா’ படம் 30 ஆண்டுகள் நிறைவு: சுரேஷ் கிருஷ்ணா பெருமிதம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான ‘பாட்ஷா’ படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு சுரேஷ் கிருஷ்ணா தனது எக்ஸ் தளத்தில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஒரு புகழ்பெற்ற படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆனதை கொண்டாட வேண்டிய நேரம் இது. அன்பான பார்வையாளர்களே, ‘பாட்ஷா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு நன்றி. முன் எப்போதும் இல்லாத வகையில், இப்போது 4கே டால்பி அட்மாஸில் மாற்றப்பட்டு வெளியாகி இருக்கிறது. […]

திரையரங்க உரிமையாளர்களுக்கு, விஷால் வேண்டுகோள்..

திரையரங்க உரிமையாளர்களுக்கு விஷால் விடுத்துள்ள வேண்டுகோள் என்ன என்பது பற்றிப் பார்ப்போம்.. ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெட் ஃப்ளவர்’. ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்னேஷ் நாயகனாக நடித்துள்ளார். பிரபலங்கள் பலர் கலந்துகொண்ட இதன் இசை வெளியீட்டு விழாவில் விஷால் பேசும்போது, ‘பி.வாசு சார் அன்றிலிருந்து இப்போது வரை நிற்கிறார் என்றால், அவரின் படங்கள் மற்றும் அவரின் உழைப்புதான் காரணம். இப்போதெல்லாம் நிறைய பேருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறார்கள். ஆனால், சுராஜ் […]

மீண்டும் பிரபுதேவா-வடிவேலு கூட்டணியில் புதிய படம்..

ஷங்கர் இயக்கிய ‘காதலன்’ திரைப்படம் தொடங்கி, பல படங்களில் இணைந்து நடித்தனர். பிரபுதேவா – வடிவேலு. இந்தக் கூட்டணியின் காமெடி காட்சிகள் அனைவராலும் ரசிக்கப்பட்டது. மேலும், இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும் வலம் வந்தார்கள். வடிவேலு கேட்டார் என்பதற்காக ‘நாய் சேகர்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துக் கொடுத்தவர் பிரபுதேவா என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பல வருடங்கள் கழித்து பிரபுதேவா – வடிவேலு இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தை கண்ணன் ரவி தயாரிக்கவுள்ளார். சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ள இப்படத்துக்கு […]

சிறு பட்ஜெட் படங்கள் வெளியிட தியேட்டர்கள் வேண்டும்: இயக்குநர் வி.சேகர் பேச்சு..

சின்ன பட்ஜெட்டில் பல படங்களை இயக்கி குடும்பங்களை ஈர்த்தவர் வி.சேகர். இந்நிலையில், தற்போது அவர் தெரிவித்துள்ள ஆதங்கம் பற்றிக் காண்போம்.. எம்.நாகரத்தினம் கதாநாயகனாக அறிமுகம் ஆகியுள்ள படம் ‘வள்ளி மலை வேலன்.’ இப்படத்தில் இலக்கியா, ராஜேந்திரன், செந்தில், செம்புலி ஜெகன், சுரேந்தர், முத்துக்காளை என பலர் நடித்துள்ளனர். எம். என்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில், நாகரத்தினம் தயாரித்துள்ளார். எஸ்.மோகன் இயக்கியுள்ளார். இதன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் வி.சேகர் பேசும்போது, ‘இந்தப்படத்தை வேலூர் வள்ளிமலையில் எடுத்துள்ளார்கள். இப்போது முருகன்தான் சீசன் […]

சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ படத்தின் கதை என்ன?: வைரலாகும் தகவல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்து இணையவெளியில் பல தகவல்கள் வெளியாகின்றன. முன்னதாக, ‘கூலி’ என தலைப்பு வைப்பதற்கு முன்பு ரஜினிகாந்த் கை நிறைய வாட்ச்சுகளை வைத்துக் கொண்டு வில்லத்தனமாக சிரித்த முகத்துடன் போஸ்டர் வெளியிடப்பட்டது தெரிந்ததே. அந்த போஸ்டரில் தங்க வாட்ச்சுகள் இடம் பெற்றிருக்கும். அதன் பின்னணி என்ன? அதாவது, வின்டேஜ் தங்க வாட்ச்சுகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் […]

நடிகை ரன்யாவுக்கு, மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு..

நடிகை ரன்யா ராவ் கடந்த மார்ச் மாதம் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். ரூ.12.56 கோடி மதிப்புள்ள தங்கத்தை துபாயில் இருந்து சட்டவிரோதமாக கடத்தியதற்காக அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில், அவர் வெளிநாட்டுச் செலாவணி மேலாண்மைச் சட்டம் மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளார். மார்ச் மாதம், ரன்யா ராவ் துபாயிலிருந்து பெங்களூரு வந்தபோது, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 14.2 […]

ரஜினியின் ‘பாட்ஷா’ திரைப்படம் மீண்டும் ரீரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்..

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ திரைப்படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படம் ரூ.1000 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பாட்ஷா திரைபடம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை கொண்டாடும் வகையில், புதிய பொலிவுடன் ‘பாட்ஷா’ ரீ ரிலீஸ் ஆவுள்ளது. முன்னதாக, இப்படம் 2017 ஆம் ஆண்டு மறு வெளியீடு செய்யப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் பாட்ஷா திரைப்படம் 100 திரையரங்குகளுக்கு […]