அதர்வா நடித்த க்ரைம் திரில்லர் ‘டிஎன்ஏ’ படம்: ஓடிடி.யில் வெளியீடு..

குழந்தையை தொலைத்த ஒரு தம்பதியின் வலி நிறைந்த தேடல் ‘டின்ஏ’ கதைக்களம்.

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா நடிப்பில் ஜூன் 20-ந்தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

இப்படம் வெளியீட்டுக்கு முன்பே, ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமை விற்கப்பட்டுவிட்டது. தற்போது ஜூலை 19-ம் தேதி ‘டி.என்.ஏ’ திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இப்படத்தில் நிமிஷா சஜயன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், சேத்தன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். இதற்கு 5 புதிய இசையமைப்பாளர்கள் ஓவ்வொரு பாடலை உருவாக்கி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘டி.என்.ஏ’ படத்தின் பின்னணி இசையினை ஜிப்ரான் அமைத்திருந்தார். திரையரங்குகளுக்கு வந்து படம் பார்த்த பலரும் இப்படத்தினைக் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. ஜூலை 19-ம் தேதி ஓடிடி வெளியீட்டுப் பிறகு, இணையத்தில் கொண்டாடப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.

படத்தில், நரபலி தொடர்பான தொடர்பான தேடல், குழந்தைக் கடத்தல் நெட்வொர்க் போன்ற காட்சிகள் திரில்லிங்காய் உருவாக்கப்பட்டு வரவேற்பு பெற்றுள்ளது.

dna movie will be ott released on july 19th
actor atharvadna movieinvestigationஅதர்வாடி என் ஏ