Browsing author

Suresh

பெருமளவு ரசிகர்களை ஈர்த்த ‘காந்தாரா’ படத்தின் பிரம்மாண்ட அப்டேட்ஸ்..

பிரமாண்டமும் கவனம் ஈர்க்கும் கதையும் கலந்தால், ரசிகர்களுக்கு உற்சாகம்தானே. அவ்வகையில் ‘கேஜிஎஃப்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பான் இந்திய அளவில் திரையுலகினரை திரும்பி பார்க்க வைத்த கன்னட சினிமா ‘காந்தாரா’. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான இப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்று, பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய அளவில் வசூலை குவித்தது. ‘காந்தாரா’ வெற்றியை தொடர்ந்து அதன் முதல் பாகம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ளது. இப்படத்தின் மிரட்டலான கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. […]

எஸ்.ஜே.சூர்யாவின் ‘கில்லர்’ படத்துக்கு, ஜெர்மனியில் இருந்து நவீன கார் இறக்குமதி..

வாலி, குஷி, நியூ, இசை போன்ற படங்களை இயக்கிய கவனம் ஈர்த்தவர் எஸ்.ஜே.சூர்யா. தற்போது நடிகராகவும் ரசிகர்களை வசீகரித்து வருகிறார். தற்போது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, சர்தார் 2 உள்பட சில படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் படம் இயக்குகிறார். முன்னதாக ‘இசை’ படத்தை தயாரித்து, இயக்கி நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த 2015 -ம் ஆண்டு வெளியாகி இருந்தது. இப்போது அவர் இயக்கும் படத்துக்கு […]

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி: அப்பாவும் மகனும் (சீமான்-பிரதீப்) ஒரு பெண்ணை காதலிக்கிறார்களா?

கதைகள் ஆயிரம், கதைப்பதும் ஆயிரம். அவ்வகையில் ‘எல்ஐகே’ படக்கதையை பொறுத்திருந்து பார்ப்போம்.. அதாவது லவ் டுடே, மற்றும் டிராகன் படங்களின் வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மிஷ்கின், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரதீப்பின் தந்தையாக சீமான் நடித்துள்ளார். இப்படம், டைம் டிராவல் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. பிரதீப் ரங்கநாதனும், அவரது தந்தை சீமானும் […]

பட்டைய கிளப்புது ‘மோனிகா’ பாடல்: பல இளம்பெண்கள் ஃப்ரீ புரமோஷன்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தில், அனிருத் இசையில் ரஜினிகாந்த், டி. ராஜேந்தர் நடனமாட வெளியான ‘சிக்கிடு’ பாடலை விட, பூஜா ஹெக்டே மற்றும் சவுபின் சாகிர் ஆட்டம் போட்ட ‘மோனிகா’ பாடல் தற்போது செம டிரெண்டாகி விட்டது. சவதீகா, கனிமா, ஜிங்குச்சா பாடல்களுக்கு இந்த ஆண்டு ஏகப்பட்ட ரசிகர்கள் நடனமாடிய நிலையில், பூஜா ஹெக்டே போலவே சிகப்பு கலர் கவுன் அணிந்துகொண்டு ஹார்பர் […]

ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்துக்கு செம மவுசு..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ திரைப்படம் வெளியாக இன்னும் சில மாதங்கள் இருக்கும்போதே, டிஜிட்டல் ரைட்ஸ் உரிமையை ரூ. 50 கோடி கொடுத்து வாங்க நிறுவனங்கள் முன் வருகின்றன. ஏ.ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் முதல் முறையாக இணைவதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகின்றது. சிவகார்த்திகேயன் – முருகதாஸ் கூட்டணி ஏற்படுத்திய எதிர்பார்ப்புகளும் இப்படத்தின் டிஜிட்டல் உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்கப்படுவதற்கு காரணமாகும். சிவகார்த்திகேயன், தற்போது வெவ்வேறு ஜானர் படங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார். டாக்டர், மாவீரன், அயலான், அமரன் […]

கணவரை பிரிந்து வாழும் ஹன்சிகா: ரசிகர்கள் ஃபீலிங்ஸ்..

நடிகை ஹன்சிகாவும் தொழில் அதிபர் சொஹைல் கதூரியாவும் காதலித்து, கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்தனர். தற்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. அதாவது, ஹன்சிகா தன் அம்மா வீட்டில் இருக்கிறார். சொஹைல் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். சில மாதங்களாகவே அவர்கள் ஒன்றாக இல்லை. இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து சுருக்கமாக ஹன்சிகா தெரிவிக்கையில், ‘இது உண்மை இல்லை’ என்று மட்டும் சொன்னார். முன்னதாக, […]

எஸ்.ஜே.சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு ‘கில்லர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..

தமிழ்த் திரையுலகில் வாலி, குஷி, நியூ, இசை போன்ற படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் எஸ்.ஜே.சூர்யா. பின்னர் நடிகராக வலம் வந்தும் ரசிகர்களை வசீகரித்தார். இந்நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கில்லர்’ படத்தின் இயக்குநராக திரும்பியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படத்தை கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இன்று எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘கில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்கள். இதற்கு திரையுலகினர் பலரும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். […]

சூர்யா முதல் இடத்தில் இருக்கிறார்: ஸ்டண்ட் சிவா பெருமிதம்..

பா. ரஞ்சித் தற்போது ‘வேட்டுவம்’ என்ற படத்தினை இயக்கி வருகிறார். ஆர்யா, கெத்து தினேஷ், அசோக் செல்வன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷுட்டிங் சமயத்தில் மோகன்ராஜ் என்ற சண்டை பயிற்சியாளர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் உயிரிழந்ததை தொடர்ந்து, பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார், சண்டை பயிற்சியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் எடுத்து கொடுத்தது தொடர்பான செய்திகள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. ரூ. 5 […]

கெனிஷாவுடன் ரவிமோகன் இலங்கை பயணம்; ஏன் தெரியுமா?

ரவிமோகன்-ஆர்த்தி விவகாரம் தெரிந்ததே. இந்நிலையில், ரவிமோகன் இப்போது இலங்கை சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் வலைதளங்களில் வைரலானது. ஆனால், இலங்கைக்கு அவர் மட்டும் தனியாக செல்லவில்லை. அவருடன் இணைந்து கெனிஷாவும் சென்றுள்ளார். இருவரும் இலங்கை சென்ற நிலையில், இலங்கை வெளியுறவுத் துறை விஜித் ஹெராத்தை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு இலங்கையில் இசைக் கச்சேரி நடத்துவது தொடர்பாக நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கெனிஷா ஏராளமான ஆல்பம் பாடல்களில் பாடியிருக்கிறார். மேலும், பல இசை நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று […]

மீண்டும் அஜித் சாருடன் இணைவதில் ரொம்ப சந்தோஷம்: ஆதிக் ரவிச்சந்திரன் தகவல்..

‘தல’ அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ மாபெரும் வரவேற்பைப் பெற்று, வசூல் சாதனையும் படைத்தது. இதனைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. இதனிடையே, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக ஆதிக் ரவிச்சந்திரன் கலந்துகொண்டார். விழாவில் இருந்து கிளம்பும்போது தெரிவிக்கையில், அடுத்து அஜித் […]