Browsing author

Suresh

புதுமுகங்கள் நடித்த ‘சயாரா’ திரைப்படம்; செம கலெக்‌ஷன்..

பாலிவுட் சினிமாவில், மோகித் சூரி இயக்கத்தில் அகன் பாண்டே மற்றும் அனீத் படா ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சயாரா’. நாயகன் மற்றும் நாயகி இருவருமே இப்படத்தில் அறிமுகம். யாஷ் ராஜ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இதன் முதல் நாள் பாலிவுட் திரையுலகினரை மலைக்க வைத்துள்ளது. முதல் நாளில் 20.75 கோடி, 2-வது நாளில் 23.50 கோடி என வசூல் செய்திருக்கிறது. இந்த வசூல் முன்னணி நடிகர்களின் படங்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. டிக்கெட் புக்கிங் […]

‘பேர்ட் கேர்ள்’ டீசரை நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..

வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான ‘பேர்ட் கேர்ள்’ டீசர் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பார்ப்போம்.. மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ், ராம்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: 26.1.2025-ல் யூடியூப், இணையத்தில் ‘பேட் கேர்ள்’ என்ற திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரில் பதின்ம வயதினர் பற்றி தவறாக சித்தரிக்கும் காட்சிகள் உள்ளன. இந்த டீசர் தற்போதும் ஆன்லைனில் உள்ளது. இது போன்ற காட்சிகள் குழந்தைகள் ஆபாசம், குழந்தை பாலியல் […]

‘ஜனநாயகன்’ படத்துடன் ‘பராசக்தி’ படம் மோதலா?: சுதா கொங்கரா விளக்கம்..

விஜய்யின் கடைசிப் படமாக ‘ஜனநாயகன்’ உருவாகி வருகிறது. ஹெச்.வினோத் இயக்கும் இப்படம் அரசியல் பேசும் கதைக்களத்தில் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் வருகிறது. அதனால், விஜய்யின் தவெக கட்சிக்கு பயன்படும் வகையிலும், பொங்கலையொட்டி ‘ஜனநாயகன்’ படம் வெளியாவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படமும் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துடன் ‘பராசக்தி’ மோதலாக ரிலீஸாகிறதா? என்பது குறித்து இயக்குநர் சுதா கொங்கரா […]

ஷாருக்கானுக்கு பலத்த காயம், ஆஸ்பத்திரியில் அனுமதி: படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு..

பாலிவுட் சினிமாவில் ஷாருக்கான் நடிப்பில் ‘கிங்’ என்ற படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகிறார். ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்து வருகிறார். இப்படத்தில், ஷாருக்கானுடன் அவரது மகள் சுகானா கானும் நடிக்கிறார். ராணி முகர்ஜி சுகானாவின் தாயாராக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து கொண்டிருந்த நிலையில், படப்பிடிப்பில் காயமடைந்தார். ஒரு சண்டைக் காட்சியின்போது, இந்த விபத்து நடந்ததாகத் தெரிகிறது. ஷாருக்கான் டூப் இல்லாமல் நடித்ததாகவும், ரிஸ்க்கான ஸ்டண்ட் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதில், அவருக்கு பலத்த […]

சிவகார்த்திகேயன் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கவுள்ள படத்தின் இசையமைப்பாளர் மாற்றம்..

தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘கோட்’ படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் வெங்கட்பிரபு. தற்போது, கதையினை இறுதி செய்யும் பணிகளில் இருக்கிறார். விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் – வெங்கட்பிரபு இணையும் படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் அனிருத்துடன் பணிபுரிய வெங்கட்பிரபு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான ‘சென்னை 28’ படம் தொடங்கி ‘கோட்’ வரை யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் […]

மடிப்பிச்சை ஏந்தியது எதற்காக?: நடிகை நளினி விளக்கம்..

தமிழ்த்திரையுலகில் 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நளினி, உயிருள்ள வரை உஷா, தங்கைக்கோர் கீதம், நூறாவது நாள் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பின்னர், ராமராஜன்-நளினி இருவரும் காதலித்து திருமணம் செய்து விவாகரத்து பெற்றனர். தற்போது, பல்வேறு குணச்சித்திர வேடங்களில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார். ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட நளினி தொடர்ந்து கோயில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோயிலுக்குச் சென்ற […]

‘கூலி’ லோகேஷ் கனகராஜை ஓவர்டேக் செய்த ‘ஜெயிலர்’ நெல்சன்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தை இயக்க லோகேஷ் கனகராஜுக்கு ரூ. 50 கோடி சம்பளம் கொடுத்திருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். 6-வது படத்திற்கே லோகேஷுக்கு லைஃப்டைம் செட்டில்மென்ட் கிடைத்துவிட்டது என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. விஜய்யை வைத்து இயக்கிய ‘லியோ’ படத்தை அடுத்தே லோகேஷ் கனகராஜின் சம்பளம் இந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது. கூலி படத்தை இயக்க ஒப்புக் கொண்டதில் இருந்து, குடும்ப நிகழ்ச்சிகளில்கூட […]

ஓடிடி.யில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 10 தமிழ்ப் படங்கள்..

ஓடிடி தளத்தில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 10 தமிழ்ப் படங்களின் பட்டியல் பார்ப்போம்.. * விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் 10-வது இடத்தில் உள்ளது. இப்படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் நெட்பிளிக்ஸில் 78 லட்சம் வியூஸ் அள்ளி இருக்கிறது. * பிரதீப் ரங்கநாதன் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் படமான டிராகன் 9-ம் இடத்தில் உள்ளது. கடந்த மார்ச் மாதம் நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆன இப்படம் 87 லட்சம் பார்வைகளுடன் 9-ம் இடத்தை […]

‘கூலி’ படத்தின் ‘பவர்ஹவுஸ்’ பாடல் வெளியீடு: 22-ந்தேதி பிரம்மாண்ட விழா..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலாக டி.ராஜேந்தர் மற்றும் தெருக்குரல் அறிவு பாடிய ‘சிக்கிட்டு’ வைப் பாடல் கடந்த மாதம் ரிலீஸ் செய்யப்பட்டது. அப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, கடந்த வாரம் ய செகண்ட் சிங்கிள் பாடலாக ‘மோனிகா’ என்கிற குத்துப் பாடல் ரிலீஸ் செய்யப்பட்டது. சுப்லாஷினி என்கிற இளம் பாடகி பாடிய இந்தப் பாடலுக்கு செளபின் சாஹிர் […]

‘சாவா’ படத்தை முந்தி, லாப சதவீதத்தில் முதலிடம் பெற்றது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’

நடப்பு ஆண்டான இந்த 2025- ம் ஆண்டில், கடந்த 6 மாதங்களில் வெளியான திரைப்படங்களின் கலெக்‌ஷன் ரிக்கார்டு பார்ப்போம்.. விக்கி கௌஷல், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‘சாவா’ பாலிவுட் படம் 800 சதவீதம் லாபம் ஈட்டியிருக்கிறது. இருந்தாலும், இந்த ஆண்டில் அதிகபட்ச லாபம் ஈட்டிய படம் அபிஷன் ஜீவிந்தின் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் தான் முதலிடத்தை பிடித்திருக்கிறது. சசிகுமார், சிம்ரன் கணவன் மனைவியாக நடித்து வெளியான இப்படம் 7 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இப்படம், […]