‘கூலி’ லோகேஷ் கனகராஜை ஓவர்டேக் செய்த ‘ஜெயிலர்’ நெல்சன்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது.

இப்படத்தை இயக்க லோகேஷ் கனகராஜுக்கு ரூ. 50 கோடி சம்பளம் கொடுத்திருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். 6-வது படத்திற்கே லோகேஷுக்கு லைஃப்டைம் செட்டில்மென்ட் கிடைத்துவிட்டது என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

விஜய்யை வைத்து இயக்கிய ‘லியோ’ படத்தை அடுத்தே லோகேஷ் கனகராஜின் சம்பளம் இந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது. கூலி படத்தை இயக்க ஒப்புக் கொண்டதில் இருந்து, குடும்ப நிகழ்ச்சிகளில்கூட கலந்துகொள்ளாமல் இருந்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். இரண்டு ஆண்டுகளாக ‘கூலி’ படத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியதால் ரூ. 50 கோடி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

‘கூலி’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்-2’ படத்தை இயக்கி வருபவர் நெல்சன் திலீப்குமார் என்பது தெரிந்ததே. இது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 5-வது படமாகும்.

சூப்பர் ஸ்டாரின் இந்த படத்தை இயக்க அவருக்கு கிடைத்திருக்கும் சம்பளம் ரூ. 60 கோடி என செய்திகள் வெளியாகின. 6-வது படத்திற்காக லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்த சம்பளத்தை தன் 5-வது படம் மூலம் ஓவர்டேக் செய்துவிட்டார் நெல்சன். அதற்குக் காரணம் ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியும் வசூலும்தான் என கூறப்படுகிறது. இந்நிலையில், 100 நாடுகள் வெளியாகும் ‘கூலி’ படம், ரூ.1000 கோடி வசூலித்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

director nelson dilipkumar overtakes lokesh kanagaraj in salary
director lokesh kanagarajNelson DilipkumarRajinikanthசம்பளம்ரஜினிகாந்த்