‘ஜனநாயகன்’ படத்துடன் ‘பராசக்தி’ படம் மோதலா?: சுதா கொங்கரா விளக்கம்..

விஜய்யின் கடைசிப் படமாக ‘ஜனநாயகன்’ உருவாகி வருகிறது. ஹெச்.வினோத் இயக்கும் இப்படம் அரசியல் பேசும் கதைக்களத்தில் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் வருகிறது. அதனால், விஜய்யின் தவெக கட்சிக்கு பயன்படும் வகையிலும், பொங்கலையொட்டி ‘ஜனநாயகன்’ படம் வெளியாவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படமும் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துடன் ‘பராசக்தி’ மோதலாக ரிலீஸாகிறதா? என்பது குறித்து இயக்குநர் சுதா கொங்கரா பதில் அளித்துள்ளார்.

‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்பட பலர் நடித்து வருகிறார்கள். ட ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

‘பராசக்தி’ படம் குறித்து இயக்குநர் சுதா கொங்கரா பேசுகையில், ‘சிவகார்த்திகேயன் கண்டிப்பாக இந்த கதாபாத்திரத்துக்கு பொருந்தக் கூடிய ஒரு நடிகர். அவரிடம் ஒரு நேர்மை, ஈடுபாடு, பக்கத்து வீட்டுப் பையன் போன்ற பண்பு உண்டு. அது எனக்கு மிகவும் பிடிக்கும். என் படத்தின் ஹீரோவும் அதே பண்பைக் கொண்டவர்தான்.

ஆனால், ரவி மோகன் அவரது தன்மைக்கு முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை செய்கிறார். நிஜத்தில் அவர் அப்படி கிடையவே கிடையாது. அவர் மிகவும் அற்புதமான மனிதர். ’ஜனநாயகன்’ படத்துடன் ‘பராசக்தி’ மோதுகிறதா? என்பது குறித்து எனக்கு தெரியாது. அதற்கு தயாரிப்பாளர் தான் சொல்ல வேண்டும்’ என்றார்.

sudha kongara about jananayagan parasakthi clash
actor vijayjananayagan movieparasakthi movieஇயக்குநர் சுதா கொங்கராஜனநாயகன்