கதைகள் ஆயிரம், கதைப்பதும் ஆயிரம். அவ்வகையில் ‘எல்ஐகே’ படக்கதையை பொறுத்திருந்து பார்ப்போம்..
அதாவது லவ் டுடே, மற்றும் டிராகன் படங்களின் வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மிஷ்கின், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரதீப்பின் தந்தையாக சீமான் நடித்துள்ளார்.
இப்படம், டைம் டிராவல் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. பிரதீப் ரங்கநாதனும், அவரது தந்தை சீமானும் ஒரே பெண்ணை காதலிப்பது தான் மையக்கரு. தந்தை-மகன் இருவருமே டைம் டிராவல் செய்து, ஒரே பெண்ணை காதலிக்கிறார்கள். இத்தகைய வில்லங்கமான கதையை விக்கி எடுத்துள்ளார் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இப்படத்தின் மூலம் சீமான் நடிகராக கம்பேக் கொடுத்துள்ளார். அவரது கதாபாத்திரம் படத்தில் ஹைலைட்டாக இருக்கும் என கூறப்படுகிறது. ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தில் முதன்முதலில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிப்பதாக இருந்தது. சில காரணங்களால் படம் டேக் ஆஃப் ஆகவில்லை. பின்னர், பிரதீப்பை நடிக்க வைத்து எடுத்து வருகிறார் விக்னேஷ் சிவன்.
இப்படம், வருகிற செப்டம்பர் 18-ந்தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அதன் ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டு காதலர் தினத்தன்று ரிலீஸ் செய்யும் முடிவில் படக்குழு உள்ளதாக கூறப்படுகிறது.