தனி ஒருவன் 2 கண்டிப்பாக வரும் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். இவரது நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தனி ஒருவன் இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா வில்லனாக அரவிந்த்சாமியும் நடித்திருந்தனர்.
இயக்குனர் மோகன்ராஜ், இயக்கத்திலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் வெளியான இந்த படத்தின் முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு இந்த படத்தில் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையிலும் அதன் பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை. சமீபத்தில் இந்த படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா நிகழ்ச்சி ஒன்றும் இந்த படத்தை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
அதாவது நான் முதல் முதலில் விருது வாங்கியது தனி ஒருவன் படத்திற்காக தான் எங்கள் தயாரிப்பில் உருவான தலைசிறந்த படங்களில் ஒன்று தனி ஒருவன். தனி ஒருவன் 2 மிகப்பெரிய படம். முதல் பாகம் போல இல்லை அதற்கான சரியான நேரத்தை பார்த்து தான் படத்தை துவங்க இருக்கிறோம் படத்தில் நிறைய ஆர்டிஸ்ட் இருக்காங்க ரவி ,நயன் இருக்காங்க தனி ஒருவன் 2 பயங்கரமான ஸ்கிரிப்ட் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு படத்தின் மீதான எதிர்பார்த்த எக்கச்சக்கமாக அதிகரிக்க செய்துள்ளது.