‘அன்னக்கிளி’ படத்தில் இளையராஜாவும் ‘ரோஜா’ படத்தில் ஏ.ஆர்.ரகுமானும் இசையமைப்பாளராக அறிமுகமாகும்போது, அவர்களின் இசை வல்லமையை அறிந்தவர் யார்? அதுபோல, புதியவர்களுக்கு கதவுகள் திறக்கட்டும். இப்ப, விஷயத்திற்கு வருவோம்..
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்களுக்கெல்லாம் அனிருத் இசையமைத்து வருவதால் செம பிஸியில் இருக்கிறார்.
அடுத்த ஆண்டில் முதல் படமாக அஜித்தின் விடாமுயற்சி, ரஜினிகாந்தின் ‘கூலி’ கமல்ஹாசனின் இந்தியன் 3, விஜய்யின் தளபதி 69 போன்ற படங்களிலும் பணிபுரிந்து வருகிறார்.
மேலும், பாலிவுட்டில் ஷாருக்கான் நடிக்க உள்ள ‘கிங்’ மற்றும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா படத்திற்கும் இசையமைக்க உள்ளார் அனிருத்.
இந்நிலையில், கவின் போன்ற இளம் நடிகர்களின் படங்களுக்கும் அனிருத் இசையமைத்து வருகிறார். அவ்வகையில், கவின் நடிப்பில் உருவாகும் 2 படங்களுக்கும் இசையமைக்க கமிட்டாகி இருந்தார். அதில் ஒன்று ‘ஹாய்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விஷ்ணு எடவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
இதுதவிர, கவினின் மற்றொரு படமான ‘கிஸ்’ படத்துக்கு அனிருத் இசையமைப்பதாக இருந்தது. ஆனால், தற்போது அப்படத்தில் இருந்து அனிருத் விலகியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, அனிருத் தற்போது ஒரு படத்திற்கு ரூ.15 கோடி சம்பளமாக வாங்கி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், ‘கிஸ்’ படத்தின் மொத்த பட்ஜெட்டே மிக குறைவு என்பதாலும் கேட்ட சம்பளம் கிடைக்காததாலும் அனிருத் அப்படத்தில் இருந்து விலக, வேகுரு இசையமைப்பாளர் இசையமைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்காலிகமாக ஏ.ஆர்.ரகுமானும் ஓய்வில் இருப்பதால், அனிருத் பக்கம் காற்று கரன்சியாகவே வீசுகிறது. இச்சூழலில் திரையார்வ நெட்டிசன்ஸ்,
“திறமையான புதிய இசையமைப்பாளர்களை அறிமுகப்படுத்துங்கள். பாடகிகள் ஹரிணி, பாம்பே ஜெயஸ்ரீ மகன்களான அபய், அம்ரித் மற்றும் ஹாரீஸ் ஜெயராஜ் மகன் சாமுவேல் உள்பட எத்தனையோ இசைக்கலைஞர்கள் இளைய தலைமுறையை கவர்ந்து வருகிறார்கள். கண்ணில் படவில்லையா; தொடர்பு கொண்டாலென்ன? பட்ஜெட் பிரச்சினையும் சரியாகுமே’ என கருத்து தெரிவிப்பது வைரலாகி வருகிறது. கவனத்தில் கொள்ளுமோ தமிழ் சினிமா.!