நடிக்காமலேயே எனக்கு சம்பளம் கொடுத்தவர் அஜித்.. நடிகர் மற்றும் இயக்குனர் சிங்கம் புலி புகழாரம்..!

நடிக்காமலேயே தனக்கு சம்பளம் கொடுத்ததாக அஜித் குறித்து இயக்குனர் சிங்கம் புலி பேசியுள்ளார்.


Ajith who paid me without acting Actor and director Singam Puli Praise

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித் ஆதிக் கூட்டணியில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில் தற்போது அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான சிங்கம் புலி அவர்கள் நேர்காணல் ஒன்றில் அஜித் குறித்து புகழ்ந்து பேசி உள்ளார்.

அதாவது பில்லா 2 படம் பண்ணும் போது அஜித் சார் தன்னை கோவாவிற்கு வர வைத்து 30 நாள் அவர் கூட வைத்திருந்து சம்பளம் கொடுத்து அனுப்பியதாக கூறியிருக்கிறார். நான்தான் படம் நடிக்கவே இல்லையே எனக்கு எதற்கு பணம் என்று கேட்டபோது நீ நாலஞ்சு படத்தை விட்டுட்டு வந்திருக்கல்ல என்று சொன்னதால் பணத்தை வாங்கிக் கொண்டேன் உடனே அடுத்த படத்துக்கும் கூட்டிட்டு போறீங்களா என்று கேட்டபோ என்னை இப்படி இறங்கிட்ட என்று ஜாலியாக கேட்டதாக பேசி உள்ளார்.

ஏற்கனவே சிங்கம் புலி அஜித்தை வைத்து ரெட் என்ற திரைப்படம் இயக்கி இருப்பதும் இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Ajith who paid me without acting Actor and director Singam Puli Praise
Ajith KumarAjith who paid me without acting.. Actor and director Singam Puli Praise..!Latest newsredSingam PuliTamil cinemaஅஜித் குமார்குட் பேட் அக்லிசிங்கம் புலிபில்லா 2ரெட்