ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ‘குட் பேட் அக்லி’ இருக்கிறது: ஆதிக் வாய்ஸ்..

‘தல’ படத்தோட ஒன்லைன் குறித்தும்- கமர்ஷியல் கருத்தும் காண்போம்..

‘தல’ அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ பட டீசரும், சிங்கிளும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன், மாஸ் சீன்களால் படத்தை ஆதிக் உருவாக்கி இருக்கிறார் என தெரிகிறது.

அதேபோல் சில நாட்களுக்கு முன்பு படத்தின் முதல் சிங்கிளான ஓஜி நிகழ்வு, டீசர் போல் இல்லாவிட்டாலும் வரவேற்பைதான் பெற்றிருக்கிறது. இந்நிலையில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவிக்கையில்,

‘குட் பேட் அக்லி’ படத்தில் வரும் 3 கேரக்டர்கள் அனைவருக்குள்ளுமே இருக்கும். இந்த உலகம் நம்மிடம் நன்றாக நடந்து கொள்ளும்போது நாம் குட்டாக இருப்போம்.

பேடாக நடக்கும்போது, அக்லியாக மாற வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதுதான் இந்தப் படத்துடைய ஒன்லைன். இது வெறும் ஆக்‌ஷன் படமாக மட்டுமில்லாமல், எமோஷன் கலந்திருக்கும் படமாகவும் இருக்கும்.

அப்பா – மகனுக்கிடையேயான எமோஷன் ரசிகர்களிடம் நன்றாக ஒர்க் அவுட் ஆகும் என்று நம்புகிறேன். இந்தப் படத்துக்கான டைட்டிலை அஜித்தான் கொடுத்தார். அவர் இந்த பெயரை கொடுத்தது ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது’ என கூறியுள்ளார்.

அப்றமென்ன, ஃபேன்ஸ் எல்லாம் “குட்டா” படம் பார்ப்போம். “அக்லி” ஆகாம பார்த்துக்குவோம்.!

ajith suggested the title of the film good bad ugly
actor ajith kumargood bad ugly movielifeஆதிக் ரவிச்சந்திரன்ரசிகர்கள்