ஐஸ்வர்யா ராஜேஷ் – விக்ராந்த் நடிக்கும் அண்டர் 18!

SR PRODUCTIONS தயாரிப்பில் கிச்சா சுதீப், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் நடிக்கும் “அண்டர் – 18” படத்தின் பூஜை விழா கோலாகலம்!

‘மெட்ராஸ்காரன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் தயாரிப்பாளர் ஜெகதீஸ் தயாரிக்கும் புதிய திரைப்படம் “அண்டர் – 18” (Under – 18). இயக்குநர் வெற்றிமாறனின் நீண்டகால இணை இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் பெருமாள் சாமி இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

கிச்சா சுதீப், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் மற்றும் கிஷோர் சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தின் பூஜை விழா இன்று சென்னையில் திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா, நடிகை ஸ்ரீபிரியா, தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், ஆர்.கே. சுரேஷ், நடிகர் நட்டி, இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், நடிகர் தங்கதுரை, பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் பேசிய அனைவரும், இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமியின் திறமை, விக்ராந்தின் அர்ப்பணிப்பு, ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு திறன் மற்றும் தயாரிப்பாளர் ஜெகதீஸின் தைரியமான முயற்சி குறித்து பாராட்டுகளை பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக, இயக்குநர் வெற்றிமாறன் பள்ளியில் உருவான கார்த்திக் பெருமாள் சாமி, தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநராக உயர்வார் என்ற நம்பிக்கையை பலரும் வெளிப்படுத்தினர்.

படத்தின் கதை:

மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் வாழும் ஒரு இளைஞன், எதிர்பாராத விதமாக ஒரு திட்டமிட்ட குற்ற வலையமைப்பில் சிக்கிக் கொள்கிறான். அவனை மீட்க பெற்றோர் மேற்கொள்ளும் போராட்டமும், அதன் பின்னணியில் இருக்கும் குற்ற உலகின் கொடூர முகமும் தான் “அண்டர் – 18” திரைப்படத்தின் மையக்கரு.

சமூகத்தில் பெரிதாக பேசப்படாத குற்றப் பின்னணிகளை நேரடியாக ஆய்வு செய்து, உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன் கூடிய ஒரு உணர்வுப்பூர்வமான கதையாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி. குடும்ப உணர்வுகள், சமூக யதார்த்தம் மற்றும் பரபரப்பான திரைக்கதை ஆகியவற்றின் கலவையாக இப்படம் உருவாகிறது.

முக்கிய நடிகர்கள்:

கிச்சா சுதீப்
விக்ராந்த்
ஐஸ்வர்யா ராஜேஷ்
கிஷோர் சேத்தன்

மேலும் பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணையவுள்ளனர்.

படப்பிடிப்பு:

“அண்டர் – 18” திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. ஓசூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இயல்பான இடங்கள் மற்றும் நிஜத்தன்மை கொண்ட காட்சியமைப்புகளுடன் படம் உருவாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பக் குழு:

தயாரிப்பு: SR PRODUCTIONS
தயாரிப்பாளர்: ஜெகதீஸ்
இயக்கம்: கார்த்திக் பெருமாள் சாமி
ஒளிப்பதிவு: வேல்ராஜ்
இசை: சாம் சி.எஸ்
பாடல்வரிகள்: இளங்கோ கிருஷ்ணன், கார்த்திக் நேத்தா
பப்ளிசிட்டி டிசைன்: வி.எம். சிவகுமார்
புரடக்ஷன் எக்ஸிக்யூட்டிவ்: வே.கி. துரைசாமி
எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசர்கள்: விஷ்ணு சக்ரவர்த்தி, அகல்யா வெங்கடேசன்
புரமோஷன்ஸ்: யோகேஷ் கிருஷ்ணா
PRO: சதீஷ் (AIM)

சமூகத்தின் மறைக்கப்பட்ட உண்மைகளை பேசும் வலுவான கதைக்களத்துடன் உருவாகும் “அண்டர் – 18”, தமிழ் சினிமாவில் முக்கியமான படைப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Aishwarya RajeshUnder 18Vikranthஅண்டர் 18ஐஸ்வர்யா ராஜேஷ்விக்ராந்த்