வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக ஷாப்பிங் செய்த ‘பிக் பாஸ்’ தாமரை செல்வி!

சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் ‘பிக் பாஸ்’ பிரபலமான தாமரை செல்வி உற்சாகமாக ஷாப்பிங் செய்துள்ளார்.

ஷாப்பிங் அனுபவம் குறித்து பேசிய தாமரை செல்வி, தியாகராய நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்ற எண்ணம் இருந்தாலும், வேலவன் ஸ்டோர்ஸுக்கு அருகிலேயே இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் வசதிகள் இருப்பதால் சிரமமின்றி ஷாப்பிங் செய்ய முடிவதாக தெரிவித்தார்.

மேலும், பெண்களுக்கான புடவைகள், பிளவுஸ்கள், நைட்டிகள், சுடிதார் மெட்டீரியல்கள், லெக்கின்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஆடை வகைகள் குறைந்த விலை முதல் உயர்தர கலெக்‌ஷன்கள் வரை கிடைப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதுதவிர, ஒரே நிறத்தில் அதிக எண்ணிக்கையிலான புடவைகள் தேவைப்படுபவர்களுக்கும் தேவையான அளவில் ஆர்டர் செய்து வாங்கும் வசதி இருப்பதாகவும் கூறினார். திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளுக்காக நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் ஒரே மாதிரியான ஆடைகளைத் தேர்வு செய்ய விரும்புபவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

- Advertisement -

வேலவன் ஸ்டோர்ஸின் பட்டுப் பிரிவிலும் ஏராளமான புடவை மற்றும் லெஹங்கா கலெக்‌ஷன்களை தாமரை செல்வி பார்வையிட்டார். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற பல்வேறு டிசைன்கள் மற்றும் வண்ணங்களில் பட்டுப் புடவைகள் இருப்பதாக அவர் பாராட்டினார்.

குழந்தைகள் மற்றும் ஆண்களுக்கான ஆடைகளையும் தாமரை செல்வி பார்வையிட்டார். குழந்தைகளுக்கான ஆடைகள், டி-ஷர்ட்கள், பேண்ட்கள், ஸ்கர்ட்கள், சுடிதார் செட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடைகளும், ஆண்களுக்கான சட்டைகள், பேண்ட்கள், கோட் சூட்கள் உள்ளிட்டவையும் பல்வேறு சலுகைகளுடன் கிடைப்பதாக தெரிவித்தார்.

இதன் மூலம் குடும்பத்தினர் அனைவருக்கும் தேவையான ஆடைகளை ஒரே இடத்தில் தேர்வு செய்து வாங்கும் வகையில் வேலவன் ஸ்டோர்ஸ் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பிரசாந்த் டவர்ஸ் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் இருந்து இறங்கியவுடன் இடதுபுறத்தில் வேலவன் ஸ்டோர்ஸ் அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் வசதியும் உள்ளது. ரயில் மற்றும் பேருந்து மூலம் வரும் வாடிக்கையாளர்களும் எளிதில் அணுகும் வகையில் ஷோரூம் அமைந்துள்ளது.

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் ஏற்கனவே வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்துள்ள நிலையில், தற்போது தாமரை செல்வியின் வருகையும் கவனம் பெற்றுள்ளது. புதிய டிசைன்கள், பல்வேறு ஆடை கலெக்‌ஷன்கள் மற்றும் சிறப்பு சலுகைகளுடன் வேலவன் ஸ்டோர்ஸ் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Actress Thamarai SelviActress Thamarai Selvi Shopping at Velavan StoreschennaiVelavan Stores