சன்னிலியோன் நடித்த படத்தில், கிளாமர் கதாபாத்திரத்தில் தமன்னா..

ஹாலிவுட்டில் வெளியான ‘பாராநார்மல் ஆக்டிவிட்டி’ என்ற சூப்பர் நேச்சுரல் ஹாரர் படத்தின் பாதிப்பில் இந்தியில் உருவான படம், ‘ராகிணி எம்எம்எஸ்’. ராஜ்குமார் ராவ், கைனஸ் மோடிவாலா ஆகியோர் நடித்திருந்தனர். 2011-ல் வெளியான இந்தப் படத்தை பாலாஜி டெலிபிலிம்ஸ் தயாரித்திருந்தது.

இப்படம், வெற்றி பெற்றதை அடுத்து இதன் அடுத்த பாகம் 2014-ல் வெளியானது. சன்னி லியோன் நாயகியாக நடித்த இந்தப் படமும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து அதன் 3-ம் பாகம் இப்போது உருவாகிறது. இதில் தமன்னா, கிளாமருடன் கூடிய முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஏக்தா கபூர் தயாரிக்கும் இந்தப் படம் முந்தைய பாகங்களை போல் இல்லாமல் ஹாரர் காமெடி படமாக உருவாக இருக்கிறது. முன்னதாக, கர்நாடகா அரசு தயாரித்த சோப்பு நிறுவனத்திற்கு விளம்பர தூதராக தமன்னா  நியமிக்கட்டார். அதற்கு அவர் பெற்ற சம்பளம் ரூ.6 கோடியே 25 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

actress tamannaah in the third part of horror film

actress tamannaahfanshorror filmசன்னி லியோன்தமன்னா