இரண்டாவது திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை. ஒரு தாயாக இருக்கவே எப்போதும் நான் விரும்புகிறேன், அதையே எதிர்பார்த்து இருக்கிறேன்’ என்கிறார் சமந்தா.
அப்படியானால், நாகசைதன்யாவை குறிப்பிடுகிறாரா? இல்லையென்றால், இதற்கு தெளிவான விளக்கம் என்ன? என இணையவாசிகள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
முன்னதாக, மையோசிடிஸ் நோய் சமந்தாவை தாக்க அதிலிருந்து மீண்டார் அவர். பிறகு அவர் நடித்த சாகுந்தலம், குஷி படங்கள் தோல்வியடைந்தன.
தற்போது, அனைத்து பிரச்சினைகளையும் கடந்து, மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
அவ்வகையில், அவரது நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு சிட்டாடல் ஹனி ஃபன்னி சீரிஸ் வெளியானது. அந்த சீரிஸுக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
இந்நிலையில், சமந்தா வெளியிட்ட ஆசைக் கருத்து வலைதளங்களில் வைரலாய் தெறிக்கிறது.
‘நான் தாய்மை அடைவது மிகவும் தாமதமாகிவிட்டது என நான் நினைக்கவில்லை. எனக்கு ஒரு தாயாக வேண்டும் என்ற கனவுகள் இன்னமும் இருக்கின்றன. நிச்சயமாக ஒரு தாயாக இருக்கவே எப்போதும் நான் விரும்புகிறேன். அது ஒரு அழகான அனுபவம். அதைத்தான் நான் எதிர்பார்த்திருக்கிறேன்.
மக்கள் பெரும்பாலும் எனது வயதை பற்றி கவலைப்படுகிறார்கள். ஆனால், தாயாக இருக்க முடியாத நேரம் என்று வாழ்க்கையில் எதுவுமே இல்லை என்று நான் நினைக்கிறேன்” என்றார்.
முன்னதாக, சமந்தா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள்.
அது குறித்து, ட்விட்டர் உரையாடலில் சமந்தா, ‘எனக்கு இரண்டாவது திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை. முதல் திருமணத்தை விடவும் இரண்டாவது திருமண விவாகரத்துகள்தான் அதிகம் என்று புள்ளி விவரம் இருக்கிறது’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அப்படியானால், தாயாகும் சூழ்நிலை உங்களுக்கு எவ்வாறு உருவாக எதிர்பார்க்கிறீர்கள்? என்ற கேள்விகள் இணையத்தில் ஹாட்டாக தெறித்து வருகின்றன.