ரம்யா பாண்டியன், வரலட்சுமி சரத்குமார், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இல்லற வாழ்வில் இணைந்து விட்டனர். தர்ஷிகா-விஷால் ஜோடி வெயிட்டிங்கில் உள்ளனர்.
இந்நிலையில் ‘ஒரு நாள் கூத்து’ படம் மூலம் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், தொடர்ந்து ‘பொதுவாக என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு புடிச்சவன்’, ‘சங்கத் தமிழன்’ உள்பட பல படங்களில் நடித்தார். தமிழ் தவிர தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
விளையாட்டிலும் நிவேதா ஆர்வம் கொண்டவர். பேட்மிண்டனில் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். அதேபோல ஃபார்முலா ஒன் கார் பந்தய பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நிவேதா. மேலும், அதில் ஹார்ட்டின் எமோஜிக்களையும் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நிவேதாவின் காதலரின் பெயர் ரஜித் இப்ராம். மாடலிங் துறையைச் சேர்ந்த இவர் தொழிலதிபராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டதாகவும் வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. எனினும் இருவரும் அது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.