திருமண வாழ்க்கை குறித்து பேசி உள்ளார் நித்யாமேனன்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். இவர் தற்போது தனுஷ் நடிப்பிலும் இயக்கத்திலும் உருவாகி வரும் இட்லி கடை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இது மட்டும் இல்லாமல் விஜய் சேதுபதியுடன் இணைந்து தலைவன் தலைவி என்ற படத்தில் நடித்துள்ளார் என்ற திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் தற்போது முதல் முறையாக தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் நித்யா மேனன். அதாவது ஒரு வயது வந்ததும் எனக்கும் காதல் அனுபவம் கிடைத்தது ஆனால் ஒவ்வொரு அனுபவமும் வலியையே தந்தது எத்தனை முறை காதல் உறவில் விழுந்தேனோ அத்தனை முறை இதயம் உடைந்தது ஒரு அழகான வாழ்க்கையே வாழ வேண்டும் என்றெல்லாம் கனவுகள் இருந்தது ஆனால் அப்படி ஒருவர் எனக்கு கிடைக்கவே இல்லை என்று கூறியுள்ளார்.
இது மட்டும் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று எந்த நிபந்தனையுடனும் நான் இல்லை ஆத்ம துணை கிடைத்தால் நாளைக்கு கூட திருமணம் செய்து கொள்ளலாம் ஆனால் தற்போது தனிமை வாழ்க்கை எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது என்று கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.