திருமணம் செய்து கொள்ளாதது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் நித்யாமேனன்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்த வருபவர் நித்யாமேனன். இவர் தமிழில் ஓ காதல் கண்மணி, மெர்சல், காஞ்சனா 2 ,இருமுகன், திருச்சிற்றம்பலம் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்றே சொல்லலாம்.
- Advertisement -
இவருக்கு 36 வயதாகும் நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். சமீபத்தில் திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணத்தை நித்யா மேனன் கூறியுள்ளார்.
அதில் பெற்றோர் திருமணம் செய்து கொள் என்று சொல்லும் போதெல்லாம் நீங்கள் திருமணம் செய்து கொண்டு 100% சந்தோஷமாக இருக்கிறீர்களா அப்படி இல்லை என்றால் எனக்கு ஏன் ரெக்கமண்ட் செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார் நித்யா மேனன்.
திருமணம் குறித்து இவர் கூறிய இந்த பதில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது