ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் திரைப்படம் சமூக வரவேற்பை பெற்றுள்ளதால் ஜெனிலியா நன்றி தெரிவித்து வீடியோ ஒன்று வெளியிட்டு உள்ளார்.
actress Jenilia thanks for thalapathy vijay fans
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படங்களில் ஒன்று சச்சின். இந்தத் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை ஜான் மகேந்திரன் இயக்கி இருந்தார். மேலும் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன், தாடி பாலாஜி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் வசூலிலும் ஏழு கோடிக்கும் மேல் வசூல் ஆகி பட்டையை கிளப்பி வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள ஜெனிலியா தளபதி விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.