பிங்க் கலர் உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் அதிதி சங்கர்.
விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் அதிதி சங்கர். இது மட்டும் இல்லாமல் பின்னணி பாடகியதாகவும் சில பாடல்களை பாடி உள்ளார்.
அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது பிங்க் நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.