13 ஆண்டுகளாக கல்வி சேவையில் நடிகர் விஷால்!

450-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி வழங்கிய நடிகர் விஷால் – 13 ஆண்டுகளாக தொடரும் கல்விச் சேவை!

நடிகர் விஷால், தனது தாயார் தேவி பெயரில் செயல்பட்டு வரும் “தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை” மூலம் கடந்த 13 ஆண்டுகளாக ஏழை மற்றும் எளிய மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி உதவிகளை வழங்கி வருகிறார்.

குறிப்பாக கொரோனா காலகட்டத்திலும் தனது கல்விச் சேவையை தொடர்ந்து மேற்கொண்ட விஷால், பொருளாதார வசதி இல்லாத மாணவர்கள் உயர்கல்வி பெறும் வகையில் பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஏழை மாணவர்கள், தந்தையை இழந்தவர்கள், குடும்பத்தின் முதல் பட்டதாரியாக உருவாகும் மாணவர்கள் மற்றும் மேல்படிப்பு தொடர முடியாத சூழலில் உள்ள மாணவ, மாணவிகளை தேர்வு செய்து அவர்களின் கல்விச் செலவுகளை அறக்கட்டளை ஏற்று வருகிறது.

இந்த ஆண்டுக்கான முதல் கட்டமாக 12ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற தகுதியான 20 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாணவர்களை தேர்வு செய்யும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சத்யபாமா பல்கலைக்கழகம், அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, நெல்லை நாடார் கல்லூரி, ஏ.சி.எஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த கல்வி உதவி திட்டம் செயல்பட்டு வருகிறது.

இதுவரை தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை மூலம் 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயர்கல்வி பயின்று, இன்று பல்வேறு முன்னணி நிறுவனங்களிலும் உயரிய பதவிகளிலும் பணியாற்றி வருகின்றனர். அதில் பலர், தங்களை கல்வி கற்க உதவிய அறக்கட்டளையின் சேவைகளிலும் தற்போது பங்கேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Vishal Continues His Educational Mission for the 13th Consecutive YearDeviFoundationVishalவிஷால்