ரஜினியுடன் நடித்த அனுபவத்தை சௌபின் சாகிர் பகிர்ந்த தகவல்கள் பார்ப்போம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் ஆக்ஸ்ட் 14-ந்தேதி ரிலீஸாகிறது.
இப்படத்தில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ என்கிற மலையாள படம் மூலம் பிரபலமான நடிகர் சவுபின் ஷாஹிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினியுடன் பணிபுரிந்த அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார். ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள சௌபின்,
‘ரஜினியுடன் நடித்த அனுபவம் வார்த்தைகளில் சொல்ல முடியாதது. அவரது இருப்பு படப்பிடிப்பு தளத்திற்கே புதிய உற்சாகத்தை கொடுத்தது. அவரது ஸ்டைல் அபாரம்.
சிறு வயதிலிருந்தே அவரை திரையில் பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள். அவரது ஸ்டைல், அவரது ஸ்வாக் எல்லாவற்றையும் நேரில் பார்த்தபோது வேறலெவலில் இருந்தது. அவர் ஒரு அற்புதமான மனிதர். அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம்.
‘கூலி’ படத்தில் எனக்கு முக்கியமான கதாபாத்திரம் உள்ளது. படத்தின் ரிலீசுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் ‘கூலி’ படத்தில் ஸ்ருதிஹாசன், அமீர்கான் உள்பட பலர் நடித்துள்ளனர்.