நடிகர் கிங்காங் தாத்தா ஆனார்!

பிரபல நடிகர் கிங்காங் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு தனது மகள் கீர்த்தனாவின் திருமணத்தை அரசியல் பிரமுகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் ஏராளமான முக்கிய பிரபலங்கள் பங்கேற்ற விழாவாக பிரம்மாண்டமாக நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இந்நிலையில், இன்று (15.06.2026) அதிகாலை சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கீர்த்தனா – நவீன் தம்பதியினருக்கு அழகான, ஆரோக்கியமான பெண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்துள்ளது.

பேத்தி பிறந்த மகிழ்ச்சியில் திளைத்து வரும் நடிகர் கிங்காங், “எங்கள் வீட்டிற்கு மகாலட்சுமி வந்துள்ளார்” என்று உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகிறார்.

புதிதாக பிறந்த குழந்தைக்கும், தாய் கீர்த்தனாவிற்கும் அனைவரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். குடும்பத்தின் இந்த மகிழ்ச்சியான தருணம் ரசிகர்கள் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

actor King KongActor King Kong Becomes a Grandfatherநடிகர் கிங்காங்