விஜய் குறித்து ‘போய்வா நண்பா’ என பாடுகிறார் ‘குபேரா’ தனுஷ்?: வைரல் டுடே

தளபதி விஜய்யின் அரசியல் பயணம் தெரிந்ததே. இச்சூழலில், தற்போது ரிலீஸாகியுள்ள தனுஷின் பாடலை வாசிப்போம்..

தேசிய விருது பெற்ற சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்த பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது ‘குபேரா’ தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா இணைந்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் உருவான ‘போய்வா போய்வா நண்பா.. ராஜாபோல கெத்தா போய்வா நண்பா..’ என்ற பாடலை வெளியிடப்பட்டு உள்ளது. பாடலை தனுஷ் பாடியுள்ளார். விவேகா எழுதியுள்ளார்.

மேலும், இப்படத்தில் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வருகிற ஜூன் 20-ந்தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகிறது

வெளியாகியுள்ள ‘போய்வா நண்பா’ பாடலில் ஜிப்பா பேண்ட்டில் ரகளையாய் ஆடியுள்ளார் தனுஷ். ‘போய் வா நண்பா’ என மறைமுகமாக யாரை வாழ்த்திப் பாடுகிறார் தனுஷ்? அவருக்கே வெளிச்சம்.

ஒரு வேளை திரையுலகை விட்டு விலகும் தளபதி விஜய்யாக இருக்குமோ? என்றெல்லாம் ரசிகர்கள் கருத்துகள் பதிவிடுவதும் வைரலாகி வருகிறது. இது குறித்து, இப்படத்தின் விழாவில் தனுஷ் தெரிவிக்க வாய்ப்பிருக்கிறது. பார்க்கலாம்.

actor dhanushactor vijaykuberaa movieரசிகர்கள்ராஷ்மிகா மந்தனா