பன்முகத் திறமையாளரான தனுஷ் இயக்கத்தில் அக்டோபர் 1-ந்தேதி திரைக்கு வரவிருக்கும் படம் இட்லி கடை. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய தகவல்கள் தற்போது வலைதளங்களில் பேச்சாக உள்ளது.
இந்நிலையில் தனுஷ் பற்றி ஒருவர் உருவாக்கிய மீம்ஸ் வீடியோவை ரசிகர்கள் விரும்பி ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது பாசிட்டிவான மீம்ஸ்.
அதாவது, தன் பட விழாக்களுக்கு வெள்ளை வேட்டி, சட்டையில் வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் தனுஷ். அப்படி இருக்கும்போது ‘இட்லி கடை’ இசை வெளியீட்டு விழாவுக்கும் சிம்பிளாக வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து வந்திருந்தார். கழுத்தில் வழக்கம் போல கருங்காலி மாலையும், ருத்ராட்ச மாலையும் இருந்தது.
‘ஆவேஷம்’ படத்தில் பகத் பாசில் வெள்ளை நிற பேண்ட், சட்டை அணிந்து வந்தார். ஆனால், அவர் வீட்டு பீரோவில் ஏகப்பட்ட வெள்ளை நிற உடை இருக்கும். அது ஏதோ கலர் கலரான உடை போன்று தேர்வு செய்வார். அதை தான் தனுஷை வைத்து மீம்ஸ் போட்டிருக்கிறார்கள்.
இது தொடர்பாக, தனுஷின் ஆடை வடிவமைப்பாளரான காவ்யா ஸ்ரீராம் கூறியதாவது, ‘அவருக்கு வெள்ளை வேட்டி, சட்டை தான் பிடிக்கும். நாமாக வலியுறுத்தவில்லை என்றால் வேட்டி, சட்டையில் கிளம்பி விடுவார்’ என்றார்.
தனுஷின் உடை பற்றிய வீடியோவோடு இன்னொரு வீடியோவும் வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ‘இட்லி கடை’ விழா மேடையில் பாட்டு பாடினார் தனுஷ். அப்பொழுது, முதல் வரிசையில் அமர்ந்திருந்த இளையமகன் லிங்கா மேடைக்கு வந்ததுடன் அப்பாவுடன் சேர்ந்து க்யூட்டாக டான்ஸும் ஆடினார்.
இது ஒரு பக்கம் இருக்க, லிங்காவை எப்பொழுது பெரிய திரையில் ஹீரோவாக பார்க்கப் போகிறோம் தனுஷ்’ என்று ஆளாளுக்கு கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். லிங்காவை பார்த்தாலே ஜம்முனு ஹீரோ மாதிரி இருக்கிறார். பேசாமல் அவருக்கு ஒரு லவ் ஸ்டோரி தயார் செய்து நீங்களே அறிமுகம் செய்து வைத்துவிடுங்கள் என்று தனுஷிடம் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.