‘ஜெயிலர்2’ படத்தில் மோகன்லாலை தொடர்ந்து பாலகிருஷ்ணா நடிக்கிறாரா?

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்2’ படத்தின் தகவல்கள் காண்போம்..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் சுமார் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. தற்போது ஜெயிலர் படத்தின் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார் அனிருத் இசையமைக்கிறார்.

முதல் பாகத்தைப் போலவே அதிரடி காட்சிகள் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோகன்லாலின் மாத்யூ என்ற டான் கதாபாத்திரம் ஜெயிலர்2 படத்தில் இடம் பெறுகிறது. இதற்காக, மோகன்லால் நடித்து வரும் ‘ஹிருதயபூர்வம்’ படப்பிடிப்பில் நெல்சன் கலந்துகொண்டார். மோகன்லால் ஜெயிலர் 2-ல் நடிப்பார் என்று உறுதியாகி உள்ளது.

ரஜினியின் மற்றொரு படம் ‘கூலி’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் ரஜினியுடன் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌரப் சுக்லா, சத்யராஜ், ரேபா மோனிகா ஜான் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்தில் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளதாகவும், அதற்கு ரூ.50 கோடி சம்பளம் கேட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் சில காட்சிகளே பாலகிருஷ்ணாவின் வருகை இருக்கும் நிலையில், சம்பளம் அதிகம் தான் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

actor balakrishna salary on rajinikanth in jailer 2 movie
actor balakrishnaactor rajinikanthjailer 2 movieபாலகிருஷ்ணாரஜினி