அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த ‘சீதா பயணம்’ பட அப்டேட்ஸ்..

நடிகராகவும் இயக்குநராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார் அர்ஜுன். இவர் இயக்கி நடித்து வெளியான ஜெய்​ஹிந்த், தாயின் மணிக்​கொடி, வேதம் ஆகிய படங்கள் ரசிகர்களை கவர்ந்தன இவர்,12 படங்​களை இயக்​கி​யுள்​ளார்.

இவர் தற்போது இயக்கியுள்ள படம், ‘சீதா பயணம்’. இதில் அவருடைய மகள் ஐஸ்வர்யா அர்​ஜுன் நாயகி​யாக நடித்​திருக்​கிறார். கன்னட நடிகர் உபேந்​தி​ரா​வின் உறவினர் நிரஞ்​சன் கதா​நாயக​னாக நடித்துள்​ளார். சத்யராஜ், பிர​காஷ்ராஜ் முக்கிய வேடங்​களில் நடித்துள்​ளனர்.

தமிழ், தெலுங்​கு, கன்னட மொழிகளில் உரு​வாகி​யுள்ள இந்​தப் படத்தை அர்​ஜுனின் ஸ்ரீராம் பிலிம்ஸ் தயாரித்​துள்​ளது. இந்நிலையில் இப்​படத்​தின் டிரெய்​லர் வெளியாகி​யுள்​ளது. காதல் கதையை கொண்ட இப்​படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்​ரவரி14-ந்தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் அர்ஜூனிடம் ‘முதல்வன்-2’ படம் உருவாகுமா? என்ற ஆர்வத்தை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக இயக்குநர் ஷங்கர் என்ன சொல்லப் போகிறார் எனவும் கேட்டு வருகின்றனர்.

actor arjun in seetha payanam movie updates
actor arjunLove Storyseetha payanam movieஐஸ்வர்யாசீதா பயணம்