காலில் விழுந்த ஆசீர்வாதம் வாங்கிய ஷாலினி.. ஜாலியாக அஜித் சொன்ன பதில்..!

ஷாலினி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க அஜித் ஜாலியாக பேசியுள்ளார்.

actor ajith and shalini latest video viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அட்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

தற்போது அஜித் 64 படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளார் ஏற்கனவே இந்த படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

இந்த நிலையில் வரலட்சுமி பூஜை அன்று அஜித்தின் மனைவி ஷாலினி அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார் அதற்கு அஜித் திரும்பவும் வீட்டுக்கு போய் நான் விழனும் என்று ஜாலியாக பேச அங்கு இருப்பவர்கள் சிரித்துள்ளனர்.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஷாலினி என் இதயம் உருகியது என்று பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

actor ajithactor ajith and shalini latest video virallatest videoShaliniviralஅஜித்ஆதிக் ரவிச்சந்திரன்குட் பேட் அட்லிவரலட்சுமி பூஜை