சிவகார்த்திகேயனுக்கு, வில்லனாக நடிக்க மறுத்தது ஏன்?: இயக்குநர் லோகேஷ் விளக்கம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய்யுள்ள ‘கூலி’ படம் வரும் 14-ந்தேதி வெளியாகிறது. தற்போது இப்படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, லோகேஷ் கனகராஜை நாயகனாக நடிக்க வைக்க பலரும் அணுகி வருகிறார்கள். இதில் ‘பராசக்தி’ படத்தில் நடிக்க முடியாமல் போனது குறித்து லோகேஷ் கனகராஜ் தெரிவிக்கையில்,

மூன்று வருடங்களாக நிறைய நண்பர்கள் என்னை நடிக்க வைக்க அணுகிறார்கள். சமீபத்தில் கூட ‘பராசக்தி’ படத்தில் வில்லனாக நடிக்க அணுகினார்கள். சுதா கொங்காரா மேடம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட அனைவருமே நம்பி வாங்க பண்ணலாம் என்றார்கள். அந்தக் கதையும் ரொம்பவே பிடித்திருந்தது. ஆனால், ‘கூலி’ பணிகள் பாதிக்கும் என்பதால் அதில் நடிக்க முடியவில்லை. இப்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் நடிக்க முடியாமல் போன கதாபாத்திரத்தில் தான் ரவி மோகன் நடித்து வருகிறார். ‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவிமோகன், ஸ்ரீலீலா, ராணா உள்பட பலர் நடித்து வருகிறார்கள். டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

act in parasakthi film to lokesh kanagaraj explains

 

actor sivakarthikeyandirector lokesh kanagarajRajinikanthசுதா கொங்காராலோகேஷ் கனகராஜ்