கடவுளை ஏமாற்ற முடியாது: ஆர்த்தியின் பதிவு..

ரவிமோகன்-ஆர்த்தி வாழ்வியல் விவகாரம் யாவரும் அறிந்ததே. இந்நிலையில், ஆர்த்தியின் இன்ஸ்டா பதிவு ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவர், தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ‘கடவுளை ஏமாற்ற முடியாது. மற்றவர்களை ஏமாற்றலாம். உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளலாம். ஆனால், கடவுளை ஏமாற்ற முடியாது’ என ஆர்த்தி பதிவிட்டிருந்தார்.

ரவிமோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நேரத்தில், அவர் வைத்திருந்த இந்த ஸ்டோரி வலைதளங்களில் வைரலானது. ரவிமோகன், ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ என்ற பெயரில் சொந்த திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

இதன் தொடக்க விழா சென்னையில் நடந்தது. இதில் கார்த்தி, சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, ஜெனிலியா என பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், தன்னுடைய தோழி கெனிஷா தனக்கு கடவுள் கொடுத்த பரிசு’ என்றும் ரவிமோகன் நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார்.

முன்னதாக, நடிகர் ஜெயம் ரவி, தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சமீபத்தில், பரஸ்பர ஒப்புதலுடன் தனது மனைவியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்தார். பின்னர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.

ravimohan shares about keneeshaa francis
aarti raviactor ravimohanmarriageஆர்த்திரவிமோகன்