சூரி நடிக்கும் ‘மண்டாடி’ பட ஆக்சன் காட்சி: 60 நாள் படப்பிடிப்பு..

‘மாமன்’ படத்தை தொடர்ந்து சூரி ஹீரோவாக நடிக்​கும் படம் ‘மண்​டாடி’. மதி​மாறன் புகழேந்தி இயக்​கும் இப்படம், படகுப் ​பந்தயத்தை மையமாகக் கொண்டு உரு​வாகிறது.

ஆர்​.எஸ்​.இன்ஃ​போடெயின்​மென்ட் சார்பில் எல்​ரெட் குமார் தயாரிக்​கும் இப்​படத்தில் தெலுங்கு நடிகர் சுஹாஸ், மஹிமா நம்​பி​யார், சத்ய​ராஜ், ரவீந்​திரா விஜய், அச்​யுத் குமார், சாச்​சனா நமி​தாஸ் ஆகியோர் முக்​கிய கதாபாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர்.

ஜி.​வி.பிர​காஷ் இசை அமைக்​கிறார். எஸ்.ஆர்.க​திர் ஒளிப்​ப​திவு செய்​கிறார். தமிழ், தெலுங்​கு, இந்தி மொழிகளில் உரு​வாகிறது. இந்​நிலையில் இப்படம் 2026-ம் ஆண்டு கோடை​யில் வெளி​யாக இருப்​ப​தாகப் படக்​குழு தெரி​வித்​துள்ளது. “படத்​தில் இடம்​பெறும் படகுப்​பந்தய காட்​சிகள், இது​வரை காணாத புதிய திரை அனுபவத்தை வழங்​கும் வகை​யில் வடிவ​மைக்​கப்​பட்​டு உள்ளன.

இந்​தக் காட்​சிகள் தத்​ரூப​மாக​வும், எதார்த்தமாக​வும் திரை​யில் கொண்​டு​வர, சர்​வ​தேச ஆக்சன் நிபுணர்​களு​டன் இணைந்து படக்​குழு பணி​யாற்​றி​யுள்​ளது. பிரபல ஸ்டன்ட் இயக்​குநர் பீட்​டர் ஹெய்ன் சண்​டைக் காட்​சிகளை அமைத்துள்​ளார். சுமார் 60 நாட்​கள் இந்​தப் படத்​துக்​காக அவர் பணி​யாற்​றி​உள்​ளார். ரூ.75 கோடி செல​வில் உருவாகி​யுள்ள இந்த படம், சூரி​யின் நடிப்​பில் முதல் பிரம்​மாண்​டப் படமாக இருக்​கும்’ என்று தயாரிப்​புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 days schedule for mandaadi film action scenes
actor sooriMandaadi Moviestoryசூரிஜி.வி பிரகாஷ்