Amala Paul About Suchi Leaks : Shocking information! | Kollywood Cinema news | Tamil Cinema news | Trending Cinema News | Latest News
சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த சுச்சி லீக்ஸிலும் இவருடைய பெயர் இடம்பெற்றது. இதுகுறித்து தற்போதுதான் அவர் முதல்முறையாக பேசியுள்ளார்.

Amala Paul About Suchi Leaks : தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். இந்த படம் சர்ச்சையை ஏற்படுத்திய போதிலும் அடுத்து வந்த மைனா இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது.

இதைதொடர்ந்து விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்த அமலாபால் 2014-ம் ஆண்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.

துளியும் மேக்கப் இல்லாமல் திரிஷா வெளியிட்ட போட்டோ – நீங்க இப்படியா இருப்பீங்க?

பின்னர் விஜய்யை விவாகரத்து செய்த அமலாபால் தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினார். திருமணத்துக்குப் பின்பும் ஹீரோயினாகவே நடித்து வெற்றி பெற்றார்.

இதில் இவர் நடிக்கும் ஆடை படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் அமலா பால் நிர்வாணமாக நடித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைதொடர்ந்து சர்ச்சை நாயகியாகவே அமலா பால் மாறிவிட்டார். அதேபோல் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த சுச்சி லீக்ஸிலும் இவருடைய பெயர் இடம்பெற்றது. இதுகுறித்து தற்போதுதான் அவர் முதல்முறையாக பேசியுள்ளார்.

இதற்கு பதில் சொன்ன அவர், “ ஒரு ஞாயிற்றுகிழமை என்னுடைய வீடியோ வருகிறது என்றார்கள். நானும் ஆவலுடன் இருந்தேன். ஆனால் காலையில் அந்த அக்கவுண்ட் டீ ஆக்டிவேட் செய்துவிட்டார்கள்” என்று ஜாலியாக கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.