மனைவியுடன் திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் பிரேம்ஜி.
தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. பிரம்மாண்ட திரையரங்குகளின் வெளியான இந்த படம் வசூலிலும் நானூறு கோடியை தாண்டி தூள் கிளப்பி வருகிறது என்று சொல்லலாம்.
வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மேலும் சினேகா, பிரசாந்த், பிரேம்ஜி, லைலா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் பிரம்மாண்ட வெற்றி அடைந்ததை தொடர்ந்து பிரேம்ஜி தனது மனைவியுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்ற சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.