baakiyalakshimi serial episode update
baakiyalakshimi serial episode update

பழனிச்சாமி பாக்கியாவிற்கு ஒரு ஐடியா கொடுக்க எழில் அமிர்தாவுடன் ரொமான்ஸ் செய்கிறார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலை இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியை சந்தித்து முதலில் கெஞ்சி பேசிய கோபி, ஈஸ்வரி எதுவும் பதில் பேசாததால் கோபமாக பேசுகிறார். ஆனால் ஈஸ்வரி ஒருத்தர் மேல திட்றத்துக்கும் கொஞ்சவும் உரிமை எடுத்துக்கலாம் ஆனால் அந்த உரிமைய கூட உங்ககிட்ட எடுத்துக்க எனக்கு இஷ்டம் இல்லை என்று சொல்லி ஆட்டோவில் ஏறி கிளம்புகிறார். எனக்கும் அப்படித்தான் நீங்க யாரும் தேவையில்லை என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

ராதிகாவிடம் வந்து நடந்த விஷயங்களை சொல்ல ஒருத்தர் உங்களை நிராகரிக்கும்போது அந்த இடத்துல எதுக்கு நீங்க போறீங்க திரும்பி திரும்பி என்று ராதிகா கேட்கிறார். போக மாட்டேன், இனிமே போக மாட்டேன் என்று கோபி சொல்லுகிறார். உங்களுக்கு தான் நானும் மயூ இருக்கோம் இல்ல நம்ம குடும்பம் இருக்கு என்று ராதிகா சொல்ல எங்களுக்கு நீங்க மட்டும் போதும் அவங்க வேற யாரும் தேவை கிடையாது என்று அழுத்தமாக சொல்லிவிடுகிறார் கோபி.

இது மட்டுமில்லாமல் பாக்யாவை ஏதாவது செய்யணும் என்று கோபமாக பேச ராதிகா எதுக்கு நம்மளுக்கு இதெல்லாம் தேவை கிடையாது அவங்க எப்படின்னா போகட்டும் நீங்க உங்க வேலைய பாருங்க என்று ராதிகா சொல்லிவிட்டு காபி எடுத்து வர எழுந்து செல்லுகிறார்.

மறுபக்கம் பாக்யா ரெஸ்டாரண்டில் ஆட்கள் லீவ் போட்டதால் பரபரப்பாக இவர் தனியாக வேலை செய்து கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து பழனிச்சாமி அங்கு வர என்னங்க மேடம் பரபரப்பா வேலை செய்றீங்க போல என்று சொல்ல, ஆட்கள் இல்லாத விஷயத்தை பற்றி சொல்லுகிறார். சரிதா மேடம் இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல ஒரு ஆள வச்சு செய்யறது தான் நம்மளுக்கு நல்லது என்று ஐடியா கொடுக்க, ஆனா அவங்க நம்ம டேஸ்ட்ல செய்வாங்களான்னு தெரியாதே என்று பாக்யா சொல்லுகிறார்.

அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல மேடம் நம்ம இப்படி எல்லாம் செய்யணும் அப்படி செய்யணும் என்று சொல்லிக் கொடுத்துட்டா அவங்க நம்மளுக்கு புடிச்ச மாதிரி செஞ்சு தருவாங்க என்று சொல்ல, பாக்யாவும் உடனே ஒரு செஃபை ரெடி பண்ண ஓகே சொல்லுகிறார். உடனே செல்வி மழை வரப்போகுது நான் வர குடை எடுத்துட்டு வரல என்று கிண்டல் அடிக்கிறார்.

எழில் கதை எழுதிக் கொண்டிருக்க அவருக்கு காபி கொடுத்துவிட்டு சமைக்க சொல்கிறார் அமிர்தா. ஆனால் எழில் கிச்சனுக்கு வந்து அமிர்தவுடன் ரொமான்ஸ் செய்ய அமிர்தா போய் வேலையை பாருங்க அப்புறம் பாத்துக்கலாம் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். ஆனாலும் எழில் அங்கிருந்து கிளம்பாமல் அமிர்தாவுடன் பேசிக்கொண்டு கட்டிப்பிடித்துக் கொள்கிறார்.

அமிர்தாவிடம் என்ன பேசினார் அதற்கு அமிர்தாவின் பதில் என்ன என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.