சித்தி ஒரு பிளான் போட உடனே சுதாரித்துள்ளார் முத்து.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் ஸ்கூட்டியில் சென்று பூவித்து முடித்து விடுகின்றனர். நீங்க வந்ததால சீக்கிரமா முடிஞ்சிடுச்சு என்று மீனா சொல்ல அதுக்கு தானே நான் வந்தேன் என் பொண்டாட்டி கஷ்டப்படுவதை பார்க்க முடியுமா என்று இருவரும் பேசிக் கொள்கின்றனர் பிறகு மீனா நேராக ஹோட்டலுக்கு போங்க, என்று சொல்ல ஹோட்டலுக்கு தான் போறேன் என்று முத்து சொல்லுகிறார்.
எப்படிங்க நான் நனைகிறது அப்படியே செய்றீங்க என்று சொல்ல அதுதான் பொண்டாட்டி மேல வச்சிருக்க பாசம்னு சொல்றது என்று முத்து சொல்லுகிறார். தாத்தா பாட்டி இருவருக்கும் சாப்பாடு வாங்கிக் கொண்டு போக, அவர்கள் இவங்க என்ன ஜோடியா வராங்க என்று கேட்க அவர் என் புருஷன் தான் பாட்டி என்று சொல்லுகிறார் மீனா. உடனே அந்த பாட்டி உனக்கு மட்டும் தான் நல்ல மனசுன்னு நினைச்சமா ஆனா உன் புருஷனுக்கும் நல்ல மனசு தான் ரெண்டு பேரும் நல்லா இருப்பீங்க என்று விபூதி எடுத்து கொடுக்கிறார்கள்.
மேலும் தாத்தா இன்னைக்கு மீனாவ பாத்திர மாட்டேனா என்று யோசித்துக் கொண்டிருந்தார் என்று கேட்க என்னாச்சு பாட்டி என்ன விஷயம் என்று மீனா கேட்கிறார் .அது ஒன்னும் இல்லமா நீ என் கனவுல வந்தமா என்று தாத்தா சொல்லுகிறார். நல்ல விஷயம் தானே என்று முத்து சொல்ல அதற்கு தாத்தா நீ வந்து அழுதுகிட்டே இருந்தம்மா என்னன்னு கேட்டாலும் எதுவுமே சொல்லாம அழுதுகிட்டே இருந்தா அதுக்காக மனசு ரொம்ப கஷ்டமா இருந்தது அதனால தான் காலையில எழுந்து பிள்ளையார் கோயில்ல போய் உனக்காக வேண்டிக்கிட்டு விபூதி வாங்கிட்டு வந்தேன் என்று சொல்லுகிறார். இதனால் மீனா மீண்டும் குழப்பம் ஆகிறார். சாப்பாடு கொடுத்து விட்டு கிளம்ப மீனா யோசித்துக் கொண்டிருக்கும் அந்த நேரம் பார்த்து முத்து என்ன ஆச்சு என்று கேட்கிறார். பயமா இருக்கு ஏதாவது ஆயிடுமோ என்று , ஏன் அப்படி நினைக்கிற என்று முத்து கேட்கிறார். ஏற்கனவே வீட்ல ரோகினி உங்களுக்கு நேரம் சரியில்லை என்று சொன்னதையும் தாத்தா சொன்னதையும் போட்டு மீனா குழப்பிக் கொள்ள முத்து இல்லாதவங்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்கிறேன் இந்த ஒரு தர்மமே உன்னை காப்பாற்றும் என்று முத்து ஆறுதல் சொல்லி கூட்டி செல்கிறார்.
சத்யாவும் அவனது நண்பரும் ஒரு டீக்கடையில் என்று டீ குடிக்க அதை சிட்டி காரில் இருந்து பார்க்கிறார் சிட்டி உடன் இருக்கும் நபரிடம் காசு கொடுத்துட்டு வா என்று சொல்லி அனுப்ப அவன் தான் மதிக்கலையே நம்ப எதுக்கு கொடுக்கணும் என்று அவன் சொல்லுகிறான் எனக்கு தெரியும் போய் குடு என்று சிட்டி சொல்லி அனுப்ப, அவரும் சத்யா குடுத்த டீக்கு இந்த காசு என்று டீக்கடைக்காரரிடம் கொடுக்க சத்தியா நான் குடிச்ச டீக்கு நீ எதுக்கு பணம் கொடுக்கிற தேவையில்ல என்று மறுக்கிறார். அண்ணன் கொடுத்தால் அப்படி பண்ணுவியா என்று சொன்னார் அவன் என்ன எண்ணத்தில் கொடுத்திருப்பான் எனக்கு தெரியும் உனக்கு முன்னாடி இருந்து நான் உன்கிட்ட வேலை பார்க்கிறேன் என்று சொல்லுகிறார். டீ குடிக்க கூட வக்கில்லை என்பது போல தான் இந்த காசை கொடுத்து இருப்பான் எனக்கு தேவையில்ல. நான் படிச்சு வேலைக்கு போய் சம்பாதிச்சுப்பேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
உடனே சிட்டி ரோகினிக்கு போன் போட்டு வீடியோ ஆதாரம் என்ன ஆச்சு என்று கேட்கிறார் நானும் எடுக்க தான் ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன் என்று சொல்ல எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல உன்ன பிளாக்மெயில் பண்றவன தட்டி வைக்கணும்னா இத நீ பண்ணனும் என்று சொல்லி போனை வைக்கிறார். அந்த நேரம் பார்த்து முத்துவும், மீனாவும், டீக்கடையில் பூ கொடுத்து விட்டு டீயும் பஜ்ஜியும் வாங்கி சாப்பிடின்றனர்.அதனைப் பார்த்த சிட்டி வயித்தெரிச்சல் பட்டு ஆவங்களை ஏதாவது பண்ணனும் என்று முடிவு எடுக்கிறார்.
பிறகு இருவரும் வண்டியில் சந்தோஷமாக போய்க்கொண்டிருக்க சிட்டி அவர்களை ஆக்சிடென்ட் பண்ணிட்டு நேரா போயிடலாம் என்று முடிவெடுக்கிறார்.அதனால் தொடர்ந்து காரை வேகமாக ஓட்டிக்கொண்டு போய் வண்டியின் மீது மோத போகிறார்.
உடனே முத்து சுதாரித்து ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்தி விட சிட்டியின் கார் வேகமாக சென்று விடுகிறது. இரு மீனா இறங்கு நான் போய் துரத்தி பார்த்துட்டு வரேன் இப்படி ஓட்டிட்டு வரா வேகமா என்று முத்து சொல்ல வேணாம் விடுங்க எவனாவது குடிச்சுட்டு ஓட்டிருப்பாய் என்று மீனா சொல்லுகிறார். குடிச்சாலும் சரியா ஓட்டணும் இல்ல என்று முத்து சொல்ல உடனே குடிக்கிறதே நான் தப்புன்னு தான் சொல்றேன் என்று சொல்லுகிறார்.
பிறகு இரவு இருவரும் வரவு செலவு கணக்கு பார்த்து எல்லாம் செலவும் போக மூன்று ஆயிரம் மீதி இருக்கு உங்க கூட நான் இன்னைக்கு ஃபுல்லா இருந்ததில் எனக்கு கஷ்டமே தெரியல ரொம்ப சந்தோஷமா இருந்தது என்று மீனா சொல்ல முத்துவும் எனக்கும் அப்படித்தான் இருந்தது நம்ப அந்த மாதிரி வெளியே போனதே இல்லையே என்று சொல்லிவிட்டு இந்த லாபம் வந்த 3000த்துல நம்ம தியேட்டர் பீச்லாம் போலாம் என்று சொல்ல இல்ல சேமிப்புன்னு ஒன்னு இருக்கு நம்ம ரூம் கட்டறதுக்காக சேர்த்து வைக்கணும் என்று சொல்ல, எப்பவுமே சேமிப்புனு இருந்தா சந்தோஷத்தை எப்படி அனுபவிக்க முடியும் என்று சொல்லுகிறார் முத்து. ஆனால் மீனா அதெல்லாம் காசு பணம் வந்த அப்போ பாத்துக்கலாம் இப்போதைக்கு வேணா என்று சொல்லி மறுத்துவிடுகிறார்.
முத்து என்ன சொல்லுகிறார் அதற்கு மீனாவின் பதில் என்ன இருவரும் என்ன பேசிக் கொள்கின்றனர் என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்