எல்லாத் துறையிலும் போட்டி இருப்பது இயல்பு. சினிமாவில் மிக அதிகம். இதில், விட்டுக்கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை என்பது வியாபார உலகுக்கு பொருந்துமா என்பது கேள்விக்குறி.?
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் “வேட்டையன்” என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். வருகின்ற அக்டோபர் மாதம் 10-ம் தேதி உலக அளவில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.
முன்னதாக, நேற்று, ‘வேட்டையன்’ இசை வேளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. உலக அளவில் சுமார் 700 கோடி ரூபாய் வசூல் செய்து மெகா ஹிட் ஆனது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து, ஏற்கனவே சூர்யாவை வைத்து “ஜெய் பீம்” என்கின்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்த ஞானவேல் இயக்கத்தில், தனது 170-வது திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார் ரஜினிகாந்த். “வேட்டையன்” என்று பெயரிடப்பட்டது.
இப்படத்தின் மூலம், முதல் முறையாக பிரபல நடிகர் அமிதாபச்சன் தமிழ் திரை உலகில் அறிமுகமாகும் நிலையில், பாஹத் பாசில், ராணா தகுபதி, துஷாரா மற்றும் ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.
இந்த திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பிரபல நடிகர் சூர்யாவின் “கங்குவா” திரைப்படமும் அதே நாளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்தது.
ஆனால், அதன் பிறகு இந்த விஷயம் குறித்து பேசிய நடிகர் சூர்யாவும், கங்குவா திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேலும் “தமிழ் சினிமாவில் 50 ஆண்டு காலமாக மிகப்பெரிய நடிகராக, தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார். ஆகவே, அவருடைய திரைப்படத்தோடு மோதுவது அவ்வளவு ஏற்புடையதாக இருக்காது” என்று கூறி, கங்குவா திரைப்படம் சோலோவாக விரைவில் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வீரிய விதை, எந்த முள்ளிலும் முட்டி மோதி முளைக்கும் தானே.!