super star rajinikanth salary vettaiyan movie
super star rajinikanth salary vettaiyan movie

வேட்டையன் படத்தில் நடித்த ரஜினி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாக உள்ளது.

த.செ ஞானவேல் இயக்கத்திலும், லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மேலும் மஞ்சு வாரியார்,பகத் பாசில், அமிதாப்பச்சன், அபிராமி, துஷாரா விஜயன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இப்படியான நிலையில் இந்தப் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் 100 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.