Ajith in Aasai Movie Secret
Ajith in Aasai Movie Secret

தல அஜித் எவ்வளவு கெஞ்சியும் ஆசை படத்தின இயக்குனர் அவரை டப்பிங் பேச அனுமதிக்கவில்லையாம்.

Ajith in Aasai Movie Secret : தமிழ் சினிமாவில் இன்று தல என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர் அஜித். இவர் இந்த இடத்தை பிடிக்க பல்வேறு சோதனைகளை சந்தித்து தனது விடா முயற்சியால் உயர்ந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இந்த நிலையில் தல அஜித் முதன்முதலாக மெகா ஹிட் கொடுத்த ஆசை படத்தில் நடந்த சுவாரசிய நிகழ்வு ஒன்று தெரிய வந்துள்ளது.

கொரானாவால் சென்னை வர முடியாமல் தவிக்கும் அஜித்..? தற்போது இங்கு தான் இருக்கிறாரா?

அதாவது அஜித் இந்த படத்திற்கு நானே டப்பிங் கொடுக்கிறேன் என்று இயக்குனரிடம் கெஞ்சினாராம். அப்போது அஜித் வாய்ஸ் இந்த கதாபாத்திரத்துக்கு செட் ஆகாது என்பதால் இயக்குனர் வசந்த் வேண்டவே வேண்டாம் என்று மறுத்து விட்டராம்.

அதன் பின்னர் அஜித்துக்கு நடிகர் சுரேஷ் தான் வாய்ஸ் கொடுத்ததாக தகவல்கள் கூறுகின்றன.