Pushpa 2

துபாயில் ரசிகர்களுடன் என்ஜாய் பண்ணும் அஜித்.. வீடியோ இதோ.!!

துபாயில் ரசிகர்களுடன் என்ஜாய் செய்துள்ளார் அஜித்.

Ajith enjoying with fans in Dubai.. Here is the video.!!
Ajith enjoying with fans in Dubai.. Here is the video.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதனைத் தொடர்ந்து குட் பேட் அக்லி என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸில் மாற்றம் இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இது அஜித் ரசிகர்களை அப்செட்டாக்கி இருக்கிறது என்று சொல்லலாம்.

ஆனால் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக தற்போது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், துபாயில் மாலை வேலையில் அஜித் ரசிகர்களுடன் என்ஜாய் செய்துள்ளார்.அதில் ஒரு ரசிகர் அவருக்கு “கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்” என்ற பாடலை பாடியுள்ளார். ரசிகரின் அந்தப் பாடலை அஜித் ரசித்து கேட்டுள்ளார். இது மட்டுமில்லாமல் அங்கிருக்கும் ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படங்களையும் எடுத்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் இருக்கிறது.